பொது செய்தி

தமிழ்நாடு

ரோடு சீரமைக்க தாமதம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
குஜிலியம்பாறை : விரிவாக்கப் பணியில் பாலத்தைக் கட்டியவர்கள், ரோட்டை சரிசெய்யாததால் வாகனங்கள் சிரமப்படுகின்றன.கோவிலுார் - கரூர் இருவழிச்சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இப்பணி தொட்டணம்பட்டியில் துவங்கி எரியோடு, கோவிலுார், பாளையம், டி.கூடலுார் தாண்டி மாவட்ட எல்லையுடன் முடிகிறது.முதற் கட்டமாக 2 மாதங்களுக்கு முன்பே ஆங்காங்கே பாலங்களை அகலமாக கட்டி

குஜிலியம்பாறை : விரிவாக்கப் பணியில் பாலத்தைக் கட்டியவர்கள், ரோட்டை சரிசெய்யாததால் வாகனங்கள் சிரமப்படுகின்றன.

கோவிலுார் - கரூர் இருவழிச்சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இப்பணி தொட்டணம்பட்டியில் துவங்கி எரியோடு, கோவிலுார், பாளையம், டி.கூடலுார் தாண்டி மாவட்ட எல்லையுடன் முடிகிறது.முதற் கட்டமாக 2 மாதங்களுக்கு முன்பே ஆங்காங்கே பாலங்களை அகலமாக கட்டி முடித்துள்ளனர். பாலங்கள் முடிந்த இடங்களில் தார் ஊற்றி ரோடு அமைக்காததால் மேடு பள்ளங்களாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது விபத்துகளையும் சந்திக்கின்றனர்.

கோவிலுார் இந்திய கம்யூ., நிர்வாகி பாலுபாரதி கூறுகையில், ''பாலங்கள் கட்டி 3 மாதங்களாகியும் ரோட்டை சரிவர முடிக்காததால் வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். துரிதபணியாக பாலங்களை கட்டியவர்கள் ரோட்டை சரிசெய்யாமல் தாமதம் செய்வது ஏன்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X