பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு வீரர்களுக்கு உடற்பயிற்சி அறிவுரை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தேசிய போட்டிகளுக்கு செல்வோர் தவிர மற்ற வீரர், வீராங்கனை பயிற்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில போட்டிக்கு செல்வோர் அவரவர் வீடுகளில் உடற்பயிற்சி மட்டும் மேற்கொண்டு வருகின்றனர். எத்தனை பேர் சரிவர உடற்பயிற்சி செய்கின்றனர் என்பது

திருப்பூர்:கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தேசிய போட்டிகளுக்கு செல்வோர் தவிர மற்ற வீரர், வீராங்கனை பயிற்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில போட்டிக்கு செல்வோர் அவரவர் வீடுகளில் உடற்பயிற்சி மட்டும் மேற்கொண்டு வருகின்றனர். எத்தனை பேர் சரிவர உடற்பயிற்சி செய்கின்றனர் என்பது தெரியவில்லை.மாவட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு குறைந்தபட்ச உடற்பயிற்சியையாவது கற்றுத்தர ஆன்லைன் மூலம் (ஜூம் மீட்டிங்) ஆலோசனை வழங்க மாவட்ட விளையாட்டுத்துறை முடிவு செய்துள்ளது.இதற்காக மாவட்டத்தின் எட்டு தாலுகாவில் உள்ள வீரர்கள் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில், ஆன்லைனில் உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணுவது என்பது குறித்து பாடம் நடத்தப்படுமென, மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X