அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் நிகழ்ச்சி ரத்து :கட்சியினர் ஏமாற்றம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி, இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பின் ரத்து செய்யப்பட்டதால், ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம்அடைந்தனர்.அவிநாசி ஒன்றியம், வஞ்சிபாளையம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு, ஊராட்சி துாய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்க,

அவிநாசி:அவிநாசியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி, இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பின் ரத்து செய்யப்பட்டதால், ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம்அடைந்தனர்.அவிநாசி ஒன்றியம், வஞ்சிபாளையம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு, ஊராட்சி துாய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்க, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், நேற்று மாலை, 3:30 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இதற்காக, பள்ளி வளாகம் முழுக்க சுத்தம் செய்யப்பட்டு, நல உதவிகள் வழங்குவதற்கான மேடை தயார் செய்யப்பட்டிருந்தது. கலைக்குழுவினர் மூலம், வீதி நாடகம் மூலம் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஊரக வளர்ச்சி முகமை, சுகாதார துறையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட, அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.உள்ளூர் தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் மா.கம்யூ.,வினர் அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். மதியம், 1:00 மணி முதல், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.மாலை, 5:30 மணிக்கு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் அரசியல் கட்சியினரும் ஏமாற்றமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X