பொது செய்தி

தமிழ்நாடு

பாட்டிலுக்குள் கைவண்ணம் காட்டும் இளைஞர்! 3 ஆண்டு முயற்சியில் கைகூடிய திறமை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:'நிப்ட்-டீ' கல்லுாரி மாணவர் சூர்யா, பாட்டிலுக்கு உட்புறம், கொரோனா விழிப்புணர்வு ஓவியங்களை தீட்டி அசத்துகிறார்.கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர், சூர்யா, 19. திருப்பூர், முதலிபாளையத்தில் உள்ள 'நிப்ட் -டீ' ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படிக்கிறார். பாட்டில்களுக்கு வெளியே ஓவியம் தீட்டுவோர் ஏராளமானோர் உள்ளனர். சூர்யாவோ, பாட்டிலுக்கு
 பாட்டிலுக்குள் கைவண்ணம் காட்டும் இளைஞர்! 3 ஆண்டு முயற்சியில் கைகூடிய திறமை

திருப்பூர்:'நிப்ட்-டீ' கல்லுாரி மாணவர் சூர்யா, பாட்டிலுக்கு உட்புறம், கொரோனா விழிப்புணர்வு ஓவியங்களை தீட்டி அசத்துகிறார்.கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர், சூர்யா, 19. திருப்பூர், முதலிபாளையத்தில் உள்ள 'நிப்ட் -டீ' ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படிக்கிறார். பாட்டில்களுக்கு வெளியே ஓவியம் தீட்டுவோர் ஏராளமானோர் உள்ளனர். சூர்யாவோ, பாட்டிலுக்கு உட்புறத்தில், அழகிய ஓவியங்களை தீட்டுகிறார்.கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியங்களை, பாட்டில்களுக்குள் தத்ரூபமாக தீட்டியுள்ளார். மருத்துவர்கள், செவிலியர், போலீசார், பத்திரிகையாளர் போன்ற முன்கள பணியாளர்களை சித்தரிக்கும் ஓவியங்கள்; சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும்; முக கவசம் அணிய வேண்டும்; கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளார். கொடிய கொரோனா அரக்கனையும், தீட்டியுள்ளார்.மாணவர் சூர்யா கூறியதாவது:கடந்த மூன்று ஆண்டு முயற்சியின் பயனாக, தற்போது, பாட்டில்களுக்குள் ஓவியமாக தீட்டும் திறன் கைகூடியுள்ளது. பாட்டில் உள்ளே ஓவியம் தீட்டுவதால் நீண்டகாலம் நிலைத்திருக்கும்.பாட்டிலுக்குள் பிரஷ் நுழைத்தபிறகு, சிறிதளவும் கவனம் சிதறிவிடக்கூடாது; கண்களும், மனமும், ஓவியத்தின் மீது மட்டுமே குவிந்திருக்கவேண்டும். சிறிதளது தவறினாலும், ஓவியம் சிதைந்துவிடும்.மருந்து பாட்டில்கள், சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களை எடுத்து, அவற்றின் உட்பகுதியில், ஓவியம் வரைகிறேன். ஓவியம் வரைந்த பாட்டில்களுக்குள் நீர் நிரப்பும்போது, மேலும் அழகாக தெரியும்.கொரோனா காலம் என்பதால், தற்போது, விழிப்புணர்வு ஓவியம்; முன்கள பணியாளர்களை பெருமைப்படுத்தும் வகையிலான ஓவியங்களை பாட்டிலுக்குள் வரைந்துள்ளேன். ஒரு பாட்டிலுக்குள் ஓவியம் தீட்டுவதற்கு, சராசரியாக ஒன்றரை மணி நேரம் தேவைப்படுகிறது. மிகவும் சிக்கலான உருவங்களையும் பாட்டில்களுக்குள் ஓவியமாக தீட்டுவது குறித்து, தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X