பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
எஸ்.டி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்திண்டுக்கல்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடந்தது. திண்டுக்கல்லில் மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப் தலைமை வகித்தார். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இரு சக்கர வாகனத்தை பாடையில் வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.* பழநி பட்டத்து விநாயகர் கோயில் அருகே நகர

எஸ்.டி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடந்தது. திண்டுக்கல்லில் மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப் தலைமை வகித்தார். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இரு சக்கர வாகனத்தை பாடையில் வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* பழநி பட்டத்து விநாயகர் கோயில் அருகே நகர தலைவர் சாதிக் அலி, ஆயக்குடியில் பேரூர் தலைவர் ரியாஜ் அகமது, மூலக்கடை அருகே மாவட்ட பொது செயலாளர் முபாரக், மதினா நகரில் மாவட்ட செயலாளர் சதாம் உசேன் தலைமையில் போராட்டம் நடந்தது.

14 பேர் கைது

திண்டுக்கல்: - பழநி பைபாஸ் ரோடு பகுதியில் தாலுகா போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை பிடித்த தாலுகா போலீசார் 14 பேரை கைது செய்து, 9 வாகனங்கள் மற்றும் ரூ.7,200 பணம் பறிமுதல் செய்தனர்.

நிவாரணம் வழங்கல்

ஒட்டன்சத்திரம்:- நகர ஒருங்கிணைந்த வர்த்தக சங்கம் சார்பில் அண்ணா சுமைதூக்கும் சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. டி.எஸ்.பி., அசோகன், ஒருங்கிணைந்த வர்த்தக சங்கத் தலைவர் பி.கே.சுப்பிரமணி, சுமை தூக்குவோர் சங்கத் தலைவர் கே.சுப்பிரமணி பொருட்களை வழங்கினர்.

கொடைரோடு: அம்மையநாயக்கனூரில் வர்த்தகர் சங்கம், கொடைரோடு டோல்கேட் நிர்வாகம் சார்பில், முன்கள பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறிகளை நிவாரண உதவியாக வழங்கினர். நிலக்கோட்டை டி.எஸ்.பி., முருகன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி முன்னிலை வகித்தார். எஸ்.பி., ரவளிபிரியா நிவாரணம் வழங்கினார்.

மூவர் கைது

திண்டுக்கல்: மைசூர் - துாத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபாட்டில் கடத்துவதாக திண்டுக்கல் ரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை திண்டுக்கல்லில் போலீசார் சோதனையிட்டனர். மதுபாட்டில்களை வைத்திருந்த மதுரை அவனியாபுரம் தட்சிணாமூர்த்தி 52, வாடிப்பட்டி அமர்நாத் 28, கோவில்பட்டி முரளிதரன் 50, ஆகியோரை போலீசார் கைது செய்து, 83 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

செறிவூட்டி வழங்கல்

நிலக்கோட்டை: சைல்டுவாய்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டன. தாசில்தார் சுப்பையா தலைமை வகித்தார். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில், செனார்டு தொண்டு நிறுவன செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க தலைவர் ஹரிஷ், செந்தில் களப்பணியாளர்கள் கயல்விழி, பானுமதி, ரேகா பங்கேற்றனர்.

உடல் மீட்பு

வத்தலக்குண்டு: எம்.குறும்புபட்டியைச் சேர்ந்தவர் பிச்சை பாண்டி 40, தோட்டத்தில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். திடீரென தண்ணீர் வராததால் குழாயை ஆய்வு செய்தார். குழாயில் அடைப்பை சரி செய்ய கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கியவர், தவறி உள்ளே விழுந்ததில் காயம் அடைந்தார். தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டபோது உயிர் பிரிந்திருந்தது.

சரக்கு பிடிபட்டது

வத்தலக்குண்டு: விருவீடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் வந்த மதுரை மாவட்டம் சாத்தான்குளம் மாரியப்பன் 31, கார்த்தி 27 ஆகியோரை விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். சோதனையில் வெளிமாநில மது பாட்டில்கள் 40 இருந்தது. அவற்றை கைப்பற்றி இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X