பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு ரயில்கள் வருகை: கூட்ஸ்ஷெட் சுறுசுறுப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் சரக்கு வர துவங்கியதால், முழு ஊரடங்கிலும் திருப்பூர் கூட்ஸ்ெஷட் செயல்பாடு சுறுசுறுப்பாகியுள்ளது.அரிசி, கோதுமை, சோளம், சோயா புண்ணாக்கு, மக்காச்சோளம், கோழித்தீவனம் உள்ளிட்டவை வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் திருப்பூர் கொண்டு வரப்படுகிறது. காங்கயம், பல்லடம், உடுமலை என மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கொண்டு

திருப்பூர்:வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் சரக்கு வர துவங்கியதால், முழு ஊரடங்கிலும் திருப்பூர் கூட்ஸ்ெஷட் செயல்பாடு சுறுசுறுப்பாகியுள்ளது.அரிசி, கோதுமை, சோளம், சோயா புண்ணாக்கு, மக்காச்சோளம், கோழித்தீவனம் உள்ளிட்டவை வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் திருப்பூர் கொண்டு வரப்படுகிறது. காங்கயம், பல்லடம், உடுமலை என மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.ஊரடங்கு, கொரோனா பாதிப்புக்கு முன், வாரத்துக்கு நான்கு சரக்கு ரயில் வரும்; அவற்றில் இருந்து மூட்டைகளை இறக்கி, லாரியில் ஏற்றி அனுப்பும் பணி நடக்கும்.ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்கள் சிலவற்றில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மே இறுதி வாரத்தில் சரக்கு ரயில் வரத்து சற்று குறைந்தது. திருப்பூர் கூட்ஸ்ெஷட் இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. தொழிலாளர்கள் பலர் வந்து சரக்கு ரயில் வருமா என காத்திருந்தனர். வாரம் இரண்டு ரயில் மட்டுமே வந்தது.நடப்பு வாரம் இதுவரை நான்கு ரயில்கள் வந்துள்ளது. அரிசி, கோதுமை, கோழித்தீவனம் வர துவங்கியுள்ளது. 150க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள், 50 க்கும் அதிகமான லாரி டிரைவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. சரக்கு ரயில் வருகையால், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X