பொது செய்தி

தமிழ்நாடு

சாலை நடுவே டிரான்ஸ்பார்மர் அகற்றாமல் சாலைப் பணி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை நடுவே அபாய நிலையில் டிரான்ஸ்பார்மரை அகற்றாமல் சாலை போடும் பணி மேற்கொள்ளப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் ஏராளமான குடியிருப்புகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், சினிமா தியேட்டர், பள்ளிக்கூடம், உழவர் சந்தை

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை நடுவே அபாய நிலையில் டிரான்ஸ்பார்மரை அகற்றாமல் சாலை போடும் பணி மேற்கொள்ளப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் ஏராளமான குடியிருப்புகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், சினிமா தியேட்டர், பள்ளிக்கூடம், உழவர் சந்தை உள்ளன.இதனால், இப்பகுதி பிசியாக காணப்படும். இந்த தெருவில் சாலையை அடைத்தபடி டிரான்ஸ்பார்மர் இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில், இந்த தெருவில் சில தினங்களுக்கு முன் தார்சாலை போடப்பட்டது. ஆனால், டிரான்ஸ்பார்மர் அகற்றப்படாமல் அந்த பகுதியை மட்டும் விட்டுவிட்டு சாலை போடப்பட்டது. இதனால், அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் டிரான்ஸ்பார்மரை உடனடியாக அங்கிருந்து அகற்றிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X