பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.டி.ஓ., அலுவலகம் திறப்பு: மக்களுக்கு அனுமதி இல்லை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:அரசு அலுவலகங்கள், 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், அவிநாசி, காங்கயம், உடுமலை பகுதி நேர அலுவலக செயல்பாடு துவங்கியுள்ளது. அதே நேரம், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் இணையதள முகவரியில் பொதுமக்கள் 'ெஹல்ப் லைன்' பக்கம் தற்காலிகமாக நிறுத்தி

திருப்பூர்:அரசு அலுவலகங்கள், 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், அவிநாசி, காங்கயம், உடுமலை பகுதி நேர அலுவலக செயல்பாடு துவங்கியுள்ளது. அதே நேரம், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் இணையதள முகவரியில் பொதுமக்கள் 'ெஹல்ப் லைன்' பக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.எல்.எல்.ஆர்., லைெசன்ஸ், வாகன பதிவு, எப்.சி., உள்ளிட்டவைக்கான கால அவகாசம் ஜூன் 30 வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் ஆர்.டி.ஓ., அலுவலகம் வர வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆர்.டி.ஓ., வெங்கட்ரமணி கூறுகையில்,' சுழற்சி முறையில் தெற்கு மற்றும் வடக்கு அலுவலகத்தில், 15 பேர் பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேங்கிய கோப்பு உள்ளிட்ட அலுவலக பணியை மட்டும் கவனித்து வருகின்றனர். ஆம்புலன்ஸ், மருத்துவத்துறை வாகனங்களுக்கு மட்டும் எப்.சி., வழங்கப்படுகிறது. அரசு உத்தரவு வரும் முன் மக்கள் ஆர்.டி.ஓ., அலுவலகம் வர அனுமதியில்லை,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X