பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் தொற்று பரவும் அபாயம்: கண்காணிப்பை பலப்படுத்த வேண்டியது அவசியம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
அவிநாசி:ரேஷன் கடைகளில், இடைவெளியின்றி மக்கள் கூடுவதை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சமீப நாட்களாக, தொற்று பரவல் கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதாக, சுகாதாரத் துறையினர் புள்ளிவிபரம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், குறிப்பிட்ட சில இடங்களில் கூட்டம் சேர்வது, தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.அவ்வகையில், பெரும்பாலான
 ரேஷன் கடைகளில் தொற்று பரவும் அபாயம்: கண்காணிப்பை பலப்படுத்த வேண்டியது அவசியம்

அவிநாசி:ரேஷன் கடைகளில், இடைவெளியின்றி மக்கள் கூடுவதை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சமீப நாட்களாக, தொற்று பரவல் கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதாக, சுகாதாரத் துறையினர் புள்ளிவிபரம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், குறிப்பிட்ட சில இடங்களில் கூட்டம் சேர்வது, தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.அவ்வகையில், பெரும்பாலான இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் மக்கள் அதிகளவில் கூடுகின்றனர். அவிநாசி, சேவூர் அருகேயுள்ள குப்பாண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், நேற்று காலை, சமூக இடைவெளியின்றி அதிகளவில் மக்கள் திரண்டதால், தொற்று பரவல் அச்சம் ஏற்பட்டது.அதேபோல், நகர, கிராமபுறங்களிலும், இத்தகைய நிலை காணப்படுகிறது. தொற்று பரவலின் முதல் அலையின் போது, ரேஷன் கடைகளில் கூட்டம் சேருவதை தவிர்க்க, ஒவ்வொரு ரேஷன் கடையிலும் போலீசார் அல்லது ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.ரேஷன் கடைகளில் அதிகபட்சம் இரண்டு ஊழியர்கள் மட்டுமே பணி புரிவதால், பொதுமக்களின் சமூக இடைவெளியை கண்காணிப்பது, ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுவது இயலாத காரியமாக உள்ளது என, அவர்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X