பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ., ஆய்வுமருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ., ஆய்வு செய்து, குவிந்து கிடந்த மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டாக்டர்கள், செவிலியர்கள் பயன்படுத்தும் முழு பாதுகாப்பு கவசம், முகக்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ., ஆய்வு செய்து, குவிந்து கிடந்த மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டாக்டர்கள், செவிலியர்கள் பயன்படுத்தும் முழு பாதுகாப்பு கவசம், முகக் கவசம், கிளவுஸ் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவைகளை மருத்துவமனையில் உள்ள பிணவறை வளாகத்தில் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடந்தன.இதனால், தொற்று பரவும் அபாயம் இருப்பதாக 'தினமலர்' நாளிதழில் படத்துடன் நேற்று செய்தி வெளியானது.இதனையடுத்து கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் நேற்று மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, நகராட்சி அதிகாரிகளை வரவழைத்து மருத்துவக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கழிவுகள் அகற்றும் பணி துவங்கியது.மேலும், மருத்துவமனையில் தண்ணீர் வசதி, நோயாளிகளுக்கான உணவு உள்ளிட்ட வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.மருத்துவமனை முன்னணி மருத்துவர் பழமலை, துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார், முன்னாள் நகர சேர்மன் ரங்கன், முன்னாள் கவுன்சிலர் முருகன், கூட்டுறவு சங்க இயக்குனர் புண்ணியமூர்த்தி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X