பொது செய்தி

தமிழ்நாடு

'விதை உற்பத்தி மூலம் லாபம்' :கலந்தாய்வில் விஞ்ஞானி உறுதி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
அவிநாசி:தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின், பொங்கலுார் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், 'விதை உற்பத்தி மற்றும் வியாபாரம்' என்ற தலைப்பில், இணையவழி கலந்தாய்வு நடத்தப்பட்டது.மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா, விதை தேவை, அதன் அவசியம் குறித்தும், உதவி விதை சான்று இயக்குனர் மாரிமுத்து, விதை உற்பத்தி மானியம், வயல் ஆய்வு, பதிவுக்கட்டணம், அங்கக சான்றளிப்பு

அவிநாசி:தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின், பொங்கலுார் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், 'விதை உற்பத்தி மற்றும் வியாபாரம்' என்ற தலைப்பில், இணையவழி கலந்தாய்வு நடத்தப்பட்டது.மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா, விதை தேவை, அதன் அவசியம் குறித்தும், உதவி விதை சான்று இயக்குனர் மாரிமுத்து, விதை உற்பத்தி மானியம், வயல் ஆய்வு, பதிவுக்கட்டணம், அங்கக சான்றளிப்பு முறை, விதை சட்டம் குறித்து விளக்கினார்.கலந்தாய்வில், விதை அறிவியல் துறை உதவி பேராசிரியர் கதிரவன் பேசியதாவது:விதை கொள்முதலில், 60 சதவீத விவசாயிகள், தாங்கள் வைத்திருக்கும் தானியங்களை சேமித்து, விதைகளாக பயன்படுத்து கின்றனர். தோட்டக்கலைப் பயிர்களில், 70 சதவீதத்துக்கும் மேல் தரமான விதைகள் கிடைக்கிறது. விதை உற்பத்தி செய்வதால், அதிக லாபம் பெற முடியும்.பயறுவகை பயிர்களில், விதை உற்பத்தி செய்வதால் கிலோ, 100 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும். இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பும் உண்டு. தரமான விதைகள், விதை நேர்த்தி, சரியான நேரத்தில், முறையாக தொழில்நுட்பங்களைக் கடைபிடித்தல், உற்பத்தி செலவை குறைத்தல் மூலம், இரண்டு மடங்கு லாபம் ஈட்ட முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X