அலைபேசி பயன்படுத்தும் பெண்கள் ஓடிவிடுவார்கள் என்றேனா? மகளிர் ஆணைய உறுப்பினர் மறுப்பு

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
லக்னோ: “பெண் பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிப்பிலேயே வைக்க வேண்டும். அலைபேசியில் தொடர்ந்து பேசும் பெண்கள் ஓடிப்போய்விடுவார்கள்” என்ற உ.பி., மகளிர் ஆணைய உறுப்பினரின் கருத்து சர்ச்சையான நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ளார்.உத்தர பிரதேச மகளிர் ஆணைய உறுப்பினர்களில் ஒருவர் மீனா குமாரி. மாநிலத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் அதனை தடுக்கும் திட்டங்கள்
Rape Cases, Girls, Mobiles, Womens Commission Member

லக்னோ: “பெண் பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிப்பிலேயே வைக்க வேண்டும். அலைபேசியில் தொடர்ந்து பேசும் பெண்கள் ஓடிப்போய்விடுவார்கள்” என்ற உ.பி., மகளிர் ஆணைய உறுப்பினரின் கருத்து சர்ச்சையான நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ளார்.

உத்தர பிரதேச மகளிர் ஆணைய உறுப்பினர்களில் ஒருவர் மீனா குமாரி. மாநிலத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் அதனை தடுக்கும் திட்டங்கள் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பெண் பிள்ளைகளை மட்டுமே மையமாக வைத்து கருத்து தெரிவித்தார்.

“அவர்களுக்கு அலைபேசி வழங்கக்கூடாது. அப்படியே கொடுத்தாலும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும். இது போன்ற குற்றங்களுக்கு எல்லாம் அம்மாக்களின் அலட்சியம் தான் காரணம். நமது பிள்ளைகளை கண்காணிப்பு வளையத்திலேயே வைத்திருக்க வேண்டும். அலைபேசியில் தொடர்ந்து பேசும் பெண் பிள்ளைகள் ஓடிப்போகிறார்கள்.” என்றார்.

அவரது கருத்து சமூக ஊடகங்களில் பரவி விவாதத்தையும், எதிர்ப்பையும் கிளப்பியது. இது குறித்து பேசிய டில்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் “ஒரு பெண்ணின் கையில் அலைபேசி இருப்பது பாலியல் வன்கொடுமைக்கு காரணமில்லை. மோசமான சமூக அமைப்பே பாலியல் வன்கொடுமைக்கு காரணம். டில்லி ஆணையத்திற்கு அவர்களை ஒரு நாள் அனுப்பினால், நாங்கள் அவர்களுக்கு கற்றுத்தருகிறோம்.” என்றார்.


latest tamil newsஇது குறித்து விளக்கமளித்துள்ள மீனா குமாரி, “எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அலைபேசியை படிப்புக்காக பயன்படுத்துகிறார்களா அல்லது பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றேன். பெண்கள் அலைபேசி பயன்படுத்தினால் அவர்கள் ஆண்களுடன் ஓடிவிடுவார்கள் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. பெண் பிள்ளைகள் பற்றிய சம்பவங்கள் தனக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்களை பற்றி மட்டுமே பேசினேன்.” என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shyamnats - tirunelveli,இந்தியா
13-ஜூன்-202108:57:40 IST Report Abuse
shyamnats டியர் அப்பு, தலை வலி யும் வயித்து வலியம் தனக்கு வந்தால் தான் தெரியும். சாதி ஒழிப்புக்காகவா பெண்களை பெற்று வைத்திருக்கிறார்கள்?
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
11-ஜூன்-202113:53:40 IST Report Abuse
sahayadhas 8 மாதற்கு முன் தனது குழந்தய கொன்று விட்டு காதலனுடன் ஓடிய விவாகாரத்த எல்லா அறிவிலிகளும் அலைபேசிய தான் காரணம் காட்டியது . இப்ப ஆடுதோ. டேய் 5G கொண்டு வந்தாலும் சரி , எவகிட்ட கொடுத்தாலும் சரி BSNL இல்லாம ஆகிட்டடி. BSNL. (B) - பாரத், ஏய் ஹிந்து ஜனங்களே புரியுமா உனக்கு.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
11-ஜூன்-202113:46:10 IST Report Abuse
sahayadhas பயப்படாமா சொல்லுங்கம்மா, 35% நல்ல காரியம் நடக்குது 65 % இது போன்ற திருட்டு காரியமும் நடக்குது, இவ்வாறு, இதில் இருக்கும் 100% வாசகர்களும் நினைத்ததுண்டு இல்லனு சொல்லு எவனாவது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X