பொது செய்தி

தமிழ்நாடு

தனிமையில் உள்ளோருக்கு சேவாபாரதி மூலம் உணவு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட சேவாபாரதி சார்பில், பல்லடம் அருகேயுள்ள, செஞ்சேரிமலை பகுதியில், கொரோனா பாதித்த மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.கடந்த பத்து நாட்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ள, 300 பேருக்கு, தினமும் மூன்று வேளை உணவு, மருத்துவ முகாம்கள் மூலம் ஹோமியோபதி நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, கபசுர
 தனிமையில் உள்ளோருக்கு சேவாபாரதி மூலம் உணவு

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட சேவாபாரதி சார்பில், பல்லடம் அருகேயுள்ள, செஞ்சேரிமலை பகுதியில், கொரோனா பாதித்த மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.கடந்த பத்து நாட்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ள, 300 பேருக்கு, தினமும் மூன்று வேளை உணவு, மருத்துவ முகாம்கள் மூலம் ஹோமியோபதி நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. மருத்துவர்கள், ஆன்லைனில் இலவச ஆலோசனைகள் கூறுகின்றனர்.ஆர்.எஸ்.எஸ்., திருப்பூர் மாவட்ட தலைவர் கார்மேகம், பா.ஜ., கோவை தெற்கு மாவட்ட பார்வையாளர் மோகன்மந்தராசலம் உள்ளிட்டோர் சேவை பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மக்களுக்கு தேவையான உணவு தயாரிப்பது, வீடு வீடாக சென்று வழங்கும் பணிகளை, தன்னார்வலர் 25 பேர் மேற்கொள்கின்றனர்.செஞ்சேரி மலை சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, கொரோனா பாதித்தோர், இலவச உணவு தேவைக்கு99426 49941 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என சேவாபாரதி அமைப்பினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X