பொது செய்தி

தமிழ்நாடு

தனியே தன்னந்தனியே...

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:பள்ளிகளில் தலைமையாசியர் தனியொருவராக பள்ளி செயல்பாடுகளை கவனிப்பது சிரமம் என தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்றால் இந்தாண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்போது, புதிய கல்வியாண்டுக்கான பணிகள் மேற்கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண் வழங்குவது, மாணவர் சேர்க்கையை துவங்குவது, பாட புத்தகங்கள் மற்றும்

திருப்பூர்:பள்ளிகளில் தலைமையாசியர் தனியொருவராக பள்ளி செயல்பாடுகளை கவனிப்பது சிரமம் என தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்றால் இந்தாண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்போது, புதிய கல்வியாண்டுக்கான பணிகள் மேற்கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண் வழங்குவது, மாணவர் சேர்க்கையை துவங்குவது, பாட புத்தகங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற பணிகளுக்காக, தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், 14ம் தேதி முதல் பணிக்கு வர உத்தர விட்டுள்ளது.அலுவலக பணியாளர்கள் இல்லாத பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் தனியொருவராக பள்ளி செயல்பாடுகளை மேற்கொள்வது சிரமான காரியம் என தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது குறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:பெரும்பாலான பள்ளிகளில், அலுவலக பணியாளர் இடம் காலியாக உள்ளது. சில பள்ளிகளில் சொற்ப எண்ணிக்கையிலேயே அலுவலக பணியாளர்கள் உள்ளனர். இச்சூழலில் தலைமை ஆசிரியர் ஒருவரே பள்ளிக்கு வர வேண்டியிருக்கும்.பள்ளி வளாகம், வகுப்பறைகளை சுத்தம் செய்வது, மாணவர்களை கல்வி 'டிவி' சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட செயல்பாடுகளில் தலைமை ஆசிரியரே தனியொருவராய் ஈடுபடுவது சிரமம்.சிலர் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றுள்ளனர். பஸ் போக்குவரத்து இல்லாத காரணத்தால், குறித்த நாளில் வருவது கேள்விக்குறியே. அரசு இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.அலுவலக பணியாளர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில், குறிப்பிட்ட சதவீத ஆசிரியர்களை சுழற்சி முறையில் பணிக்கு வரவழைக்கும் அதிகாரத்தை தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X