தமிழ்நாடு

453 டன்: மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை...15 நாட்களில் வேளாண் துறை சாதனை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், கடந்த 17 நாட்களில் 330.615 டன் காய்கறிகளும், 123.113 டன் பழங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில், காய்கறி, பழங்கள், இறைச்சி, உணவகம் உள்ளிட்ட கடைகள் குறிப்பிட்ட
 453 டன்: மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை...15 நாட்களில் வேளாண் துறை சாதனை

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், கடந்த 17 நாட்களில் 330.615 டன் காய்கறிகளும், 123.113 டன் பழங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில், காய்கறி, பழங்கள், இறைச்சி, உணவகம் உள்ளிட்ட கடைகள் குறிப்பிட்ட நேரம் வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.ஆனால், ஊரடங்கினை பொருட்படுத்தாமல் பெரும்பாலானோர் வெளியே சுற்றி திரிந்ததால், நாளுக்கு நாள் தொற்றின் தாக்கம் அதிகரித்தது.

இதையொட்டி கடந்த மே மாதம் 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டன.இதற்கு மாற்று ஏற்பாடாக, நகர்புறம் மட்டுமின்றி அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 24ம் தேதி முதல் நடமாடும் காய்கறி மற்றும் பழ விற்பனை தொடங்கியது.

இதில், கூட்டுறவுத்துறை 18, வேளாண் வணிகத்துறை 13, தோட்டக்கலைத்துறை 183, வேளாண்மைத்துறை 43, ஊரகவளர்ச்சித்துறை 106, கள்ளக்குறிச்சி நகராட்சி 37, பேரூராட்சித்துறை 83 என மொத்தம் 483 வாகனங்கள் மூலம் மாவட்டம் முழுதும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டன.இதில், மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் ஆகிய 5 தாலுகாக்களுக்குட்பட்ட கிராமங்களுக்கும் நாள்தோறும் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டன.நாளடைவில் விவசாயிகளின் வரத்து அதிகரித்ததால், நடமாடும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன.

இந்நிலையில், கடந்த 7ம் முதல் முழு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு காய்கறி, பழக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனாலும், கொரோனா அச்சத்தினாலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும், வாகனங்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் காய்கறி, பழங்களை மட்டுமே வாங்க விரும்புகின்றனர்.மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், கடந்த மே 24 முதல் ஜூன் 9ம் தேதி வரை 15 நாட்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 330.615 டன் காய்கறிகளும், 123.113 டன் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் உலகம்மை முருகக்கனி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X