விதிகளை மீறி கடைகள் திறப்பு மீண்டும் தொற்று பரவும் அபாயம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
தியாகதுருகம்-தியாகதுருகத்தில் விதிகளை மீறி பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அதிகரித்து தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கொரோனா தொற்றைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைக்கு

தியாகதுருகம்-தியாகதுருகத்தில் விதிகளை மீறி பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அதிகரித்து தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது.இதன் காரணமாக மருந்து கடைகள், பால் விற்பனை நிலையம், ஓட்டல்கள் (பார்சல்கள் மட்டும்), மளிகை, காய்கறி, பழக்கடைகள் மற்றும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.இந்நிலையில் தியாகதுருகம் நகரில் விதிகளை மீறி துணிக்கடைகள், எலக்ட்ரிக்கல், ஹார்டுவேர், பேன்சி ஸ்டோர், சிமென்ட் கடைகள், ஜூவல்லரி, டைல்ஸ், பெயிண்ட் கடைகள் என பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.இதனால் நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதால் மீண்டும் தொற்று அதிகரித்து பலர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கலெக்டர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X