பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று பாதிப்பு குறைகிறது: ஒரே நாளில், 1,770 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று மட்டும், 1,770 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், இம்மாத துவக்கத்தில் இருந்தே, கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்று பாதித்தவர்கள் விரைவாக குணமடைந்தும் வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு, நேற்று ஒரே நாளில், 1,770 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் நேற்று, 897

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று மட்டும், 1,770 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், இம்மாத துவக்கத்தில் இருந்தே, கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்று பாதித்தவர்கள் விரைவாக குணமடைந்தும் வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு, நேற்று ஒரே நாளில், 1,770 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் நேற்று, 897 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா மொத்த பாதிப்பு, 72 ஆயிரத்து, 037 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 53 ஆயிரத்து, 940 பேர் குணமாகி, வீடு திரும்பியுள்ளனர்.கடந்த சில வாரங்களாக, 18 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலை மாறி, 17 ஆயிரத்து, 485 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம், 12 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்; மாவட்டத்தில் இதுவரை, 612 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில், தொடர்ந்து வீடு வீடாக பரிசோதனை நடத்தப்படுகிறது.காய்ச்சல் முகாம்களும் நடத்துகிறோம். ஆரம்ப நிலையில், தொற்று பாதிப்பு தெரியவருவதால், எளிதாக குணமாகி வீடு திரும்பிவிடுகின்றனர். காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவு இருந்தால், தாமதம் செய்யாமல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X