பொது செய்தி

தமிழ்நாடு

தாய் தந்தையை இழந்த சிறுமி: உதவி கேட்டு முதல்வருக்கு மனு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பல்லடம்:தாய் தந்தையை இழந்த சிறுமி ஒருவர், உதவி கேட்டு கோரிக்கை மனு ஒன்றை முதல்வருக்கு அனுப்பி உள்ளார்.பல்லடம் அருகே கேத்தனுாரை சேர்ந்தவர் கந்தசாமி, 54. டிரைவர். மனைவி சாந்தாமணி, 41, மற்றும் மகள் நிரஞ்சனா, 14. இவர், கேத்தனுார் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 2019ல், சாந்தாமணி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த, 2ம் தேதி, கந்தசாமியும் உடல்நல குறைவால்

பல்லடம்:தாய் தந்தையை இழந்த சிறுமி ஒருவர், உதவி கேட்டு கோரிக்கை மனு ஒன்றை முதல்வருக்கு அனுப்பி உள்ளார்.பல்லடம் அருகே கேத்தனுாரை சேர்ந்தவர் கந்தசாமி, 54. டிரைவர். மனைவி சாந்தாமணி, 41, மற்றும் மகள் நிரஞ்சனா, 14. இவர், கேத்தனுார் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 2019ல், சாந்தாமணி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த, 2ம் தேதி, கந்தசாமியும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தார். இதனால், ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட நிரஞ்சனா, அதே பகுதியில் உள்ள தனது பாட்டி விஜயலட்சுமியுடன் வசிக்கிறார்.தாய் தந்தையை இழந்து தவிக்கும் நிரஞ்சனா, முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவில், 'படிப்பு, மற்றும் எதிர்காலத்தின் நலனை கருத்தில் கொண்டு, அரசு உதவ வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சிறுமியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதால், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X