தேங்கிய கழிவுநீரை அகற்றணும்! வாகனங்கள் கவிழும் ஆபத்து

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி 20வது வார்டில் குருவாயூரப்பன் நகர் வடக்கு குடியிருப்பு பகுதி உள்ளது. இதில் ஏ.டி., காலனியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு உரிய கழிவு நீர் வடிகால் வசதி இல்லை. இதனால், இப்பகுதியில் உள்ளோர் தங்கள் வீட்டு முன்புறம் ஆழமாக குழி தோண்டி அதில் கழிவு நீரை தேக்கியுள்ளனர்.நீண்ட நாளாக கழிவு நீர் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசு

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி 20வது வார்டில் குருவாயூரப்பன் நகர் வடக்கு குடியிருப்பு பகுதி உள்ளது. இதில் ஏ.டி., காலனியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு உரிய கழிவு நீர் வடிகால் வசதி இல்லை. இதனால், இப்பகுதியில் உள்ளோர் தங்கள் வீட்டு முன்புறம் ஆழமாக குழி தோண்டி அதில் கழிவு நீரை தேக்கியுள்ளனர்.நீண்ட நாளாக கழிவு நீர் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியும் அதிகளவில் உள்ளது.பலர், வீட்டு கழிவு நீரை நடக்கும் பாதையில் திருப்பி விட்டுள்ளனர். வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், பாதையின் நடுவே வாய்க்கால் போல் சென்று பாய்கிறது. இதனால் இந்த பாதையில் நடந்து செல்லவோ வாகனங்கள் செல்லவோ முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.இந்த சாக்கடை வாய்க்காலுக்கு பயந்து ஓரமாக வாகனங்கள் ஓட்டிச் சென்றால் வீடுகளின் முன்புறமுள்ள கழிவு நீர் குழியில் விழும் அபாயம் உள்ளது.அண்மையில் இந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு தம்பதி, சாக்கடை குழியில் தடுமாறி விழுந்து, பலத்த காயமடைந்தனர். இருவரும் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.இது போல் தினமும் பலரும் இந்த பாதையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இப்பகுதியில் உரிய கழிவு நீர் வடிகால் அமைக்கப்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X