பொது செய்தி

தமிழ்நாடு

விசைத்தறிக்கு அனுமதி இல்லை: விசைத்தறியாளர்கள் ஆதங்கம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பல்லடம்:விசைத்தறிகளை இயக்க கூடாது என்ற அறிவிப்பு, விசைத்தறியாளர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.பல்லடம் வட்டாரத்தில், விசைத்தறி காடா துணி உற்பத்தி பிரதானமாக உள்ளது. இத்தொழில் சார்ந்து, விசைத்தறி கூடங்கள், சைசிங், ஸ்பின்னிங், வீவிங் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.

பல்லடம்:விசைத்தறிகளை இயக்க கூடாது என்ற அறிவிப்பு, விசைத்தறியாளர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.பல்லடம் வட்டாரத்தில், விசைத்தறி காடா துணி உற்பத்தி பிரதானமாக உள்ளது. இத்தொழில் சார்ந்து, விசைத்தறி கூடங்கள், சைசிங், ஸ்பின்னிங், வீவிங் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அவ்வகையில், விசைத்தறிகள் சார்ந்த நிறுவனங்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்படவில்லை.விசைத்தறி சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:பனியன் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஓரிரு தொழிலாளருடன் செயல்படும் விசைத்தறி தொழிலுக்கு அனுமதி வழங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. அரசு உத்தரவை கடைபிடித்து விசைத்தறிகளை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம்.இருந்தும், விதிமுறை மீறி சிலர் இயக்குவதால், அபராதம், 'சீல்' வைக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. எனவே, விசைத்தறியாளர்கள் அரசு உத்தரவை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X