பொது செய்தி

தமிழ்நாடு

தொற்றையா... அமைச்சரையா? யாருக்கு வரவேற்பு அளிக்குது ஆளுங்கட்சி கூட்டம்:வேடிக்கை பார்க்கும் போலீசார், அதிகாரிகள்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்;ஆளும்கட்சியினர் கும்பலாக கூடுவதால், கொரோனா பரவுமென, அரசு அலுவலர்கள் அச்சமடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் நடக்கும் அரசு விழா மற்றும் ஆய்வு நிகழ்ச்சிகளுக்காக, அமைச்சர்கள் வந்து பங்கேற்கின்றனர்.மாவட்டத்தில், இரண்டு அமைச்சர்கள் இருப்பதால், அரசு நிகழ்ச்சியின் போது, ஆளும்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கூட்டமாக
 தொற்றையா... அமைச்சரையா? யாருக்கு வரவேற்பு அளிக்குது ஆளுங்கட்சி கூட்டம்:வேடிக்கை பார்க்கும் போலீசார், அதிகாரிகள்

திருப்பூர்;ஆளும்கட்சியினர் கும்பலாக கூடுவதால், கொரோனா பரவுமென, அரசு அலுவலர்கள் அச்சமடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் நடக்கும் அரசு விழா மற்றும் ஆய்வு நிகழ்ச்சிகளுக்காக, அமைச்சர்கள் வந்து பங்கேற்கின்றனர்.மாவட்டத்தில், இரண்டு அமைச்சர்கள் இருப்பதால், அரசு நிகழ்ச்சியின் போது, ஆளும்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கூட்டமாக நிற்கின்றனர்.நேற்று, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் வந்திருந்த போதும், தி.மு.க., வை சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டமாக நின்றிருந்தனர்.மரியாதை நிமித்தமாக அமைச்சரை சந்திக்க, நீண்ட நேரம் கூட்டமாக காத்திருந்தனர். அமைச்சரும், கட்சியினரை சந்தித்து விட்டு, ஆய்வுகூட்டத்துக்கு சென்றார். இதேபோல், ஒவ்வொரு அமைச்சர் வரும்போதும், கட்சியினர் அரசு அலுவலகங்களில் கூடி, கட்சி விவகாரம் தொடர்பாக சந்திக்கின்றனர்.இது, ஆபத்தான கொரோனா காலகட்டம்; தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பொது இடத்தில், ஐந்து பேருக்கு மேல் கூடுவது குற்றம். அப்படியிருந்தும், அரசு நிகழ்ச்சிகளின் போது, ஆளும் கட்சியினர் கூட்டம் சேர்வதை, போலீசோ, அதிகாரிகளோ தடுக்க முடிவதில்லை.கொரோனா ஊரடங்கு காலத்தில், அரசு அலுவலகங்களில் கூட்டமாக சேர்ந்து, தொற்று பரவ காரணமாக இருந்துவிடகூடாது என, அரசு அலுவலர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X