பொது செய்தி

தமிழ்நாடு

புத்தேரி கோவிலில்அமாவாசை வழிபாடு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பெண்ணாடம்-பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் மற்றும் மகா மாரியம்மனுக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி நேற்று காலை 7:00 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 7:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் மகா மாரியம்மனுக்கு அமாவாசை சிறப்பு பூஜை,

பெண்ணாடம்-பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் மற்றும் மகா மாரியம்மனுக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி நேற்று காலை 7:00 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 7:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் மகா மாரியம்மனுக்கு அமாவாசை சிறப்பு பூஜை, காலை 8:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களின்றி அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X