பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறி இரவு நேர கடைகள் செயல்பாடு: தொற்றுக்கு அழைப்பு விடுக்கும் அவலம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஊரடங்கு நாளில் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்ட நேரம் மீறி காய்கறி கடைகள் இயங்குகின்றன.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டது.அவ்வகையில், அனுமதிக்கப்பட்ட கடைகள் திறக்கப்படுகின்றன. இது தவிர
 ஊரடங்கை மீறி இரவு நேர கடைகள் செயல்பாடு: தொற்றுக்கு அழைப்பு விடுக்கும் அவலம்

திருப்பூர்:ஊரடங்கு நாளில் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்ட நேரம் மீறி காய்கறி கடைகள் இயங்குகின்றன.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
அவ்வகையில், அனுமதிக்கப்பட்ட கடைகள் திறக்கப்படுகின்றன. இது தவிர தள்ளுவண்டி கடைகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில், உரிய உள்ளாட்சி அமைப்பு அனுமதியுடன் காய்கறி மற்றும் மளிகை பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளன.இந்த தளர்வில் தற்போது பிளாட்பார கடைகளுக்கும் இந்த நேரத்தில் செயல்படலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் பகுதியில் இது போல் அனுமதிக்கப்பட்ட கடைகள் விற்பனையில் ஈடுபட்டுள்ளன.
அதே சமயம் சில பகுதிகளில் இந்த பிளாட்பார கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்தும் இயங்குகின்றன.செட்டிபாளையம், ெவங்கடேஸ்வரா நகர் பகுதியில் இரவு நேரம் விளக்குகள் எரிய விட்டு பிளாட்பார கடைகள் இயங்குகின்றன. அவற்றில் பொருள் வாங்கவும் வாடிக்கையாளர் கூட்டம் காணப்படுகிறது.செட்டிபாளையம் பகுதி நகர எல்லையாக உள்ளதாலும், மாலை நேரத்துக்கு பின் இக்கடைகள் செயல்படுவதாலும், அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாத நிலை உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X