காங்., கட்சிக்கு தேவை 'ஆப்பரேஷன்': வீரப்ப மொய்லி

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி: காங்., கட்சியில் மிகப் பெரிய, 'ஆப்பரேஷன்' செய்ய வேண்டிய அவசியமும், நேரமும் வந்துவிட்டது என மூத்த காங்., தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.காங்., அதிருப்தி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி கூறியுள்ளதாவது: கட்சியில் பதவி, பொறுப்புகள் அளிக்கும்போது, கட்சியின் கொள்கைகளில் உள்ள ஈடுபாடு குறித்து, தலைமை ஆராய வேண்டும்.
Congress, Major Surgery, Veerappa Moily

புதுடில்லி: காங்., கட்சியில் மிகப் பெரிய, 'ஆப்பரேஷன்' செய்ய வேண்டிய அவசியமும், நேரமும் வந்துவிட்டது என மூத்த காங்., தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

காங்., அதிருப்தி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி கூறியுள்ளதாவது: கட்சியில் பதவி, பொறுப்புகள் அளிக்கும்போது, கட்சியின் கொள்கைகளில் உள்ள ஈடுபாடு குறித்து, தலைமை ஆராய வேண்டும். குடும்பத்துக்கு உள்ள மரியாதை போன்ற காரணங்களுக்காக இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது.


latest tamil news


ஆனால் அவர்கள் கொள்கை பிடிப்பு இல்லாமல், சுயநலத்துக்காக கட்சி மாறுகின்றனர். ஜிதின் பிரசாதா வெளியேறியது, கட்சிக்கு நல்ல படிப்பினை. கட்சியில் மிகப் பெரிய, 'ஆப்பரேஷன்' எனப்படும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமும், நேரமும் வந்துவிட்டது. நாளை பார்த்துக் கொள்ளலாம் என, ஒத்தி வைக்க முடியாது.

அடுத்த ஆண்டில் ஏழு மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. அதில் சிறப்பாக செயல்படாவிட்டால், 2024 லோக்சபா தேர்தலை நம்மால் எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்து, கட்சித் தலைமை செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
11-ஜூன்-202114:22:05 IST Report Abuse
R KUMAR செய்தால் பிழைக்க வாய்ப்பு உள்ளதா? இல்லை கைவிட்ட கேசா?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
11-ஜூன்-202113:48:26 IST Report Abuse
sankaseshan சித்த ராமய்யா , கார்கே மோயிலி இவனுங்களை சேர்க்க ஆப்பரேஷன் பண்ணனும் .
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
11-ஜூன்-202113:00:02 IST Report Abuse
Suppan போகிற போக்கைப் பார்த்தால் கண்டி குடும்பம், பசி போன்ற ஊழல் பெருச்சாளிகளைத் தவிர மற்ற எல்லா தலைவர்களும் காங்கிரசுக்கு திதி கொடுத்துவிடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X