தமிழ்நாடு

தீவிரம்: ரூ. 2.20 கோடியில் கால்வாய்கள் தூர்வாரும் பணி...மேட்டூரில் 12ல் தண்ணீர் திறப்பால் நடவடிக்கை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி,புவனகிரி, டெல்டா வட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் காவிரி பாசனம்பெறுகிறது. டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்துநாளை 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு குறித்த காலத்தில் தண்ணீர் திறப்பதால், ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரையில் குறுவை, அக்டோபரில் துவங்கி ஜனவரி வரை சம்பா ஆகிய இரு போக சாகுபடி
 தீவிரம்: ரூ. 2.20 கோடியில் கால்வாய்கள் தூர்வாரும் பணி...மேட்டூரில் 12ல் தண்ணீர் திறப்பால் நடவடிக்கை

கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி,புவனகிரி, டெல்டா வட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் காவிரி பாசனம்பெறுகிறது.

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்துநாளை 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு குறித்த காலத்தில் தண்ணீர் திறப்பதால், ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரையில் குறுவை, அக்டோபரில் துவங்கி ஜனவரி வரை சம்பா ஆகிய இரு போக சாகுபடி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், கடலுார் மாவட்ட டெல்டா பகுதி மின் மோட்டார் வைத்துள்ள விவசாயிகள் குறுவை சாகுபடி பணியை முன் கூட்டியே துவங்கியுள்ளனர். நிலத்தை சீர் படுத்தி உழவு ஓட்டுவது, நாற்று விடுவது, வளர்ந்த நாற்றுகளை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், டெல்டா பாசன பகுதி கால்வாய்கள், வடிகால் வாய்க்கால்கள் துார்வாரி கரைகள் பலப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.இப்பணியை கலெக்டர் பாலசுப்ரமணியம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.இது தொடர்பாக கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படுகிறது. உரிய காலத்தில் திறக்கும் தண்ணீரில், இம்மாத இறுதிக்குள் கீழணை மற்றும் வீராணம் ஏரிக்கு வந்துவிடும்.குறிப்பிட்டகாலத்தில் தண்ணீர் கிடைப்பதால் குறுவை சாகுபடியை கடலுார்மாவட்ட டெல்டா பாசன விவசாயிகள் துவக்கியுள்ளனர்.

இந்த ஆண்டு 35 ஆயிரம் எக்டேர் குறுவை சாகுபடி இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வரையில், 16 ஆயிரத்து 500 எக்டேரில் குறுவைசாகுபடி நடந்துள்ளது.தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது.காவிரி தண்ணீர் தடையின்றி கடைமடை வரையில் சென்று சேர வசதியாக மாவட்ட டெல்டா பகுதியில் ரூ. 2.20 கோடி மதிப்பில் 55 கால்வாய்கள் துார்வாரி கரைகள் பலப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் 202 கி.மீ., நீள கால்வாய் சரி செய்யப்படும். இது வரையில் 25 கால்வாய் பணி முடிந்துள்ளது.அதே போல், 100 நாள் வேலை திட்டத்தில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் 242 கி.மீ., நீளத்திற்கு 112 சிறு பாசன வாய்க்கால்கள் சீரமைப்பு பணியும் நடந்து வருகிறது.இப்பணிகள் அனைத்தும் வரும் 28 ம் தேதிக்குள் முடிக்க பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

துார்வாரும் பணி தரமாக நடப்பதை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் பொதுப்பணித்துறை உதவிபொறியாளர், வேளாண் துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதி நிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.அவர்கள் வேலையின் தன்மையை ஆய்வு செய்து, வாட்ஸ் ஆப்பில் பதிவிடுவார்கள். எனவே, இப்பணிகள் தரமாக நடைபெறும்.சாகுபடி பணிகளை விவசாயிகள் துவங்க உதவியாககூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் பணிதுவங்கப்பட்டுள்ளது.

மேலும், நெல் விதைகள், உரம்தட்டுப்பாடின்றி கிடைக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பை கடலுார் டெல்டா பாசன விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X