பொது செய்தி

தமிழ்நாடு

அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திட்டக்குடி-திட்டக்குடி அடுத்த சிறுமுளை, வையங்குடி, சாத்தநத்தம், ஆதமங்கலம் கிராமங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார்.வெலிங்டன் பாசன விவசாயிகள் சிறுமுளை, வையங்குடி, சாத்தநத்தம்,ஆதமங்கலம், மருதத்தூர், புத்தேரி, தருமகுடிகாடு உட்பட எட்டு இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி தொழிலாளர் நலன் மற்றும் திறன்

திட்டக்குடி-திட்டக்குடி அடுத்த சிறுமுளை, வையங்குடி, சாத்தநத்தம், ஆதமங்கலம் கிராமங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார்.வெலிங்டன் பாசன விவசாயிகள் சிறுமுளை, வையங்குடி, சாத்தநத்தம்,ஆதமங்கலம், மருதத்தூர், புத்தேரி, தருமகுடிகாடு உட்பட எட்டு இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசனிடம் கோரிக்கை விடுத்தனர்.அமைச்சர் பரிந்துரையின் பேரில் சிறுமுளை, வையங்குடி, சாத்தநத்தம், ஆதமங்கலம் கிராமங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் துவங்க அனுமதி வழங்கப்பட்டு நேற்று திறப்புவிழா நடந்தது. அமைச்சர் கணேசன் பங்கேற்று அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.மண்டல மேலாளர் தேன்மொழி, துணை மேலாளர் பாரி, தி.மு.க.,ஒன்றிய செயலாளர் அமிர்தலிங்கம், நகர செயலாளர் பரமகுரு, விவசாய சங்க தலைவர்கள் சிறுமுளை மருதாசலம், சாத்தநத்தம் பொன்னுசாமி, ஆதமங்கலம் சங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X