பேரூராட்சிகளில் எரிவூட்டி திட்டம் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சிகளில் எரிவூட்டி திட்டம் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு

Added : ஜூன் 11, 2021
Share
கடலுார்-பேரூராட்சிகளில் திட கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் எரிவூட்டி திட்டம் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். பேரூராட்சிகள் துணை இயக்குனர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேரூராட்சிகளில் திட கழிவு மேலாண்மை

கடலுார்-பேரூராட்சிகளில் திட கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் எரிவூட்டி திட்டம் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். பேரூராட்சிகள் துணை இயக்குனர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேரூராட்சிகளில் திட கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் செயல்படுத்தப் படும் எரிவூட்டி திட்டம்,கழிவு நீர் கசடு நீக்கு மேலாண்மை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.மேலும் இத்திட்டங்களை விரிவுபடுத்துவது தொடர்பான பேரூராட்சி அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். பேரூராட்சிகளில் கை பம்புகள் மற்றும் மோட்டார் பம்புகள் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். தெரு விளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.அலுவலர்கள் கொரோனா தடுப்பு பணிகளை தொய்வின்றி செய்ய அறிவுறுத்தினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X