கூலித்தொழிலாளி சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

 கூலித்தொழிலாளி சாவு

Added : ஜூன் 11, 2021
Share
புதுச்சத்திரம்-புதுச்சத்திரம் அருகே சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார்.சிதம்பரம் தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் மனோகர், 48; பிளம்பர். இவர் நேற்று சிதம்பரத்திலிருந்து புதுச்சத்திரத்திற்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். புதுச்சத்திரம் ரிஜிஸ்டர் ஆபிஸ் அருகே எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.

புதுச்சத்திரம்-புதுச்சத்திரம் அருகே சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார்.சிதம்பரம் தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் மனோகர், 48; பிளம்பர். இவர் நேற்று சிதம்பரத்திலிருந்து புதுச்சத்திரத்திற்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். புதுச்சத்திரம் ரிஜிஸ்டர் ஆபிஸ் அருகே எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X