பொது செய்தி

தமிழ்நாடு

மனநலம் பாதித்தவர் உறவினரிடம் ஒப்படைப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் சோதனைச்சாவடி அருகே தனியாக சுற்றிய மனநலம் பாதித்த வாலிபரை ஊர்க்காவல் படை வீரர்கள் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர்.விருத்தாசலம் டி.எஸ்.பி., மோகன் தலைமையில் நகர எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து, ஊரடங்கு விதிமீறுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலையில், எல்.ஐ.சி., அருகே உள்ள சோதனைச்சாவடி

விருத்தாசலம்-விருத்தாசலம் சோதனைச்சாவடி அருகே தனியாக சுற்றிய மனநலம் பாதித்த வாலிபரை ஊர்க்காவல் படை வீரர்கள் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர்.விருத்தாசலம் டி.எஸ்.பி., மோகன் தலைமையில் நகர எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து, ஊரடங்கு விதிமீறுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலையில், எல்.ஐ.சி., அருகே உள்ள சோதனைச்சாவடி வழியாக நேற்று முன்தினம் இரவு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சென்றார்.ஊர்க்காவல்படை வீரர்கள் நிர்மல், மணிகண்டன் ஆகியோர் விசாரித்ததில், கும்பகோணம் பழனிமுத்து எனவும், ஒரு மொபைல் எண்ணையும் தெரிவித்தார். மற்ற விபரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. விசாரணையில், வாலிபர் சற்று மனநலம் பாதித்து இருப்பது உறுதியானது. மொபைல் எண்ணில் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, ஊர்க்காவல் படை தளபதி சிவானந்தராஜா முன்னிலையில் வாலிபர் பழனிமுத்து நேற்று ஒப்படைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X