சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளிக்கும்போது மாயமான மாணவர் உடல் மீட்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
புதுச்சத்திரம்-ஆற்றில் குளிக்கும் போது மாயமான பள்ளி மாணவர் உடல் சடலமாக மீட்கப்பட்டது.புதுச்சத்திரம் அடுத்த திருச்சோபுரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் மாணிக்கராஜ், 18; பிளஸ் 2 மாணவர். இவர் இதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் பாலையா மகன் சஞ்சய், 20; முருகேசன் மகன் ஹரிகிருஷ்ணன், 18; ஆகியோருடன், நேற்று முன்தினம் மாலை இப்பகுதியில் உள்ள பரவனாற்றில் குளிக்கச்சென்றார். அப்போது

புதுச்சத்திரம்-ஆற்றில் குளிக்கும் போது மாயமான பள்ளி மாணவர் உடல் சடலமாக மீட்கப்பட்டது.புதுச்சத்திரம் அடுத்த திருச்சோபுரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் மாணிக்கராஜ், 18; பிளஸ் 2 மாணவர். இவர் இதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் பாலையா மகன் சஞ்சய், 20; முருகேசன் மகன் ஹரிகிருஷ்ணன், 18; ஆகியோருடன், நேற்று முன்தினம் மாலை இப்பகுதியில் உள்ள பரவனாற்றில் குளிக்கச்சென்றார். அப்போது மாணிக்கராஜ் எதிர்பாராமல் நீரில் மூழ்கினார், மற்ற இருவரும் கரை திரும்பினர்.தகவலறிந்த கடலூர் சிப்காட் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சேற்றில் சிக்கிய நிலையில் மாணிக்கராஜ் உடல் நேற்று சடலமாக மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X