பொது செய்தி

தமிழ்நாடு

சலுான் கடை திறக்க அனுமதியளிக்க மனு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கடலுார்-சலுான்களை திறந்து தொழில் நடத்த வழிவகை செய்ய வேண்டும் என, முடி திருத்துவோர் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை முடிதிருத்தும் அழகுகலை தொழிலாளர் நலச்சங்க கடலுார் மாவட்ட தலைவர் ஏழுமலை, செயலாளர் பச்சையப்பன், பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனு:முடிதிருத்தும் நிலையங்களை அடிக்கடி மூட அரசு

கடலுார்-சலுான்களை திறந்து தொழில் நடத்த வழிவகை செய்ய வேண்டும் என, முடி திருத்துவோர் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை முடிதிருத்தும் அழகுகலை தொழிலாளர் நலச்சங்க கடலுார் மாவட்ட தலைவர் ஏழுமலை, செயலாளர் பச்சையப்பன், பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனு:முடிதிருத்தும் நிலையங்களை அடிக்கடி மூட அரசு உத்தரவிட்டுள்ளதால் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது. கடை வாடகை, மின்சார கட்டணம், வீட்டு வாடகை மற்றும் அன்றாட குடும்ப செலவுகளுக்கு போதிய வருமானமின்றி தவித்து வருகிறோம். ஏற்கனவே, தினத்தண்டல், மாத வட்டிக்கு பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்த எங்களது கடன் சுமை, தற்போதைய ஊரடங்கில் கடை மூடியதால் அதிகரித்துள்ளது. எனவே, இதர கடைகளை காலை 6:00 மணி முதல் மாலை 5:00 வரையில் திறக்க அனுமதித்தது போல் முடிதிருத்தும் நிலையங்களையும் திறக்க அரசு உத்தரவிட வேண்டும். தடைக்கால நிவாரணமாக ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X