சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வட மாநில தொழிலாளரை அழைத்து வந்த பஸ்கள் பறிமுதல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:பீஹார் மற்றும் அசாமில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்த இரு பஸ்களை, காங்கயத்தில் வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.ஊரடங்கு கட்டுப்பாடுகளால், திருப்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியில் எண்ணெய் ஆலைகள், நுால் மில்கள் இயக்கப்படாமல் உள்ளன. இவற்றில் பணியாற்றிய வட மாநிலத்தினர் பலர், சொந்த ஊர் சென்று விட்டனர்.அரசு தடையை மீறி, சில நிறுவனங்கள் ரகசியமாக இயங்கி
 வட மாநில தொழிலாளரை அழைத்து வந்த பஸ்கள் பறிமுதல்

திருப்பூர்:பீஹார் மற்றும் அசாமில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்த இரு பஸ்களை, காங்கயத்தில் வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.ஊரடங்கு கட்டுப்பாடுகளால், திருப்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியில் எண்ணெய் ஆலைகள், நுால் மில்கள் இயக்கப்படாமல் உள்ளன. இவற்றில் பணியாற்றிய வட மாநிலத்தினர் பலர், சொந்த ஊர் சென்று விட்டனர்.அரசு தடையை மீறி, சில நிறுவனங்கள் ரகசியமாக இயங்கி வருகின்றன; அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று அதிகாலை இரு தனியார் பஸ்களில், வட மாநில தொழிலாளர்கள் காங்கயம் அழைத்து வரப்படுவதாக தகவல் கிடைத்தது. வருவாய் துறையினர் மற்றும் போலீசார் கண்காணித்தனர். பீஹாரில் இருந்து காங்கயம் எண்ணெய் ஆலைக்கு, 67 பேருடன் ஒரு பஸ்சும், அசாமில் இருந்து தேங்காய் உலர் களத்துக்கு, 47 பேருடன் மற்றொரு பஸ்சும் வந்தது.தாசில்தார் சிவகாமி தலைமையிலான அதிகாரிகள், இந்த பஸ்களை பறிமுதல் செய்தனர். தொழிலாளர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X