தமிழ்நாடு

கொரோனா பரிசோதனை செய்தவர்கள் : கலெக்டர் பாலசுப்ரமணியம் அறிவுறுத்தல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கடலுார்-கொரோனோ பரிசோதனை செய்து கொண்டவர்கள் முடிவு தெரியும் வரையில் மூன்று நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என, கலெக்டர் பாலசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.அவர் அளித்த பேட்டி: கடலுார் மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் குறைந்து வருகிறது. மாவட்டத்தில் 12 அரசு மருத்துவமனைகள், 18 தனியார் மருத்துவ மனைகள், 17 தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைத்து

கடலுார்-கொரோனோ பரிசோதனை செய்து கொண்டவர்கள் முடிவு தெரியும் வரையில் மூன்று நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என, கலெக்டர் பாலசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் அளித்த பேட்டி: கடலுார் மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் குறைந்து வருகிறது. மாவட்டத்தில் 12 அரசு மருத்துவமனைகள், 18 தனியார் மருத்துவ மனைகள், 17 தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைத்து சிகிச்சையளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் 850 ஆக்சிஜன் படுக்கைகள் உட்பட 1,552 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 199 ஆக்சிஜன் படுக்கைகள் உள்பட 245 படுக்கைகளும் உள்ளன. சிறப்பு முகாம்களில் 3,100 படுக்கை உள்ளது. இதில், 900 பேர் மட்டுமே தங்கியுள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் சாதாரண படுக்கைகளும் காலியாக உள்ளன.முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக சிறப்பு அதிகாரி நியமித்து பரிசோதனை, மருந்து, உணவு, அடிப்படை வசதிகள் குறித்து கண்காணிக்கிறோம். சளி, இருமல், காய்ச்சலுக்கு மருந்து கடைகளில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிட்டு குணமாகாமல், கொரோனா நோய் முற்றிய பிறகு மருத்துவமனைக்கு வருவதால் இறப்பு அதிகரிக்கிறது. நோய் அறிகுறி இருந்தாலே கொரோனா பரிசோதனை செய்து கொள்வதுடன், மருத்துவமனைகளை அணுக வேண்டும்.

கொேரானா பரிசோதனை செய்தவர்கள், முடிவு வரும் வரை 3 நாட்கள் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால், தொற்று உறுதியானால் அவர்களால் மற்றவர்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்த முடியும். இந்த நடைமுறையை மாவட்டத்தில் கடைபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X