பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று உறுதியானவர்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுகோள்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கடலுார்-கொேரானா தொற்று உறுதியானவர்கள் வெளியே செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், சப் கலெக்டர்கள் பிரவீன் குமார், மதுபாலன், இணை இயக்குனர் ரமேஷ்பாபு,

கடலுார்-கொேரானா தொற்று உறுதியானவர்கள் வெளியே செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், சப் கலெக்டர்கள் பிரவீன் குமார், மதுபாலன், இணை இயக்குனர் ரமேஷ்பாபு, துணை இயக்குனர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். கலெக்டர் பேசியதாவது:மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடக்கும் துாய்மைப்பணிகள், கொரோனா பரிசோதனை செய்தல், தொற்று பாதித்தவர்களை கண்டறிதல் உட்பட அனைத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். கொரோனா தொற்று உறுதியானால் தொற்றின் தன்மைக்கேற்ப மருத்துவமனை அல்லது கொரோனா பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தொற்று உறுதியானவர்கள் வெளியே செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதனை சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடப்பதை அலுவலர்கள் கண்காணித்து பொது மக்கள் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்று உறுதியானவருடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஒரு முறை மட்டுமே பரிசோதனை செய்யாமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். தொற்று அதிகம் கண்டறிந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து காவல், வருவாய், சுகாதாரத்துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X