சம்பவம் செய்தி

தமிழ்நாடு

15 சவரன், ரூ.8.50 லட்சம் திருட்டு: எஸ்.ஐ., 2 போலீசார் 'சஸ்பெண்ட்'

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
வேலுார்:வேலுார் அருகே, சாராய வியாபாரிகள் வீடுகளில், 15 சவரன் நகை, 8.50 லட்சம் ரூபாயை திருடிய எஸ்.ஐ., மற்றும் இரண்டு போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக, 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்து, போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.வேலுார் மாவட்டம், ஊசூர் அருகே குருமலையில் உள்ள நச்சுமேடு கிராமத்தில்

வேலுார்:வேலுார் அருகே, சாராய வியாபாரிகள் வீடுகளில், 15 சவரன் நகை, 8.50 லட்சம் ரூபாயை திருடிய எஸ்.ஐ., மற்றும் இரண்டு போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக, 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்து, போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.வேலுார் மாவட்டம், ஊசூர் அருகே குருமலையில் உள்ள நச்சுமேடு கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக தகவல் வந்தது. அரியூர் எஸ்.ஐ., அன்பழகன், 52, தலைமையில், 10 போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.இதற்கிடையில், சாராய வியாபாரிகள் வீடுகளை பூட்டி தப்பியோடினர். சாராய வியாபாரி இளங்கோ, செல்வம் ஆகியோர் வீட்டின் பூட்டை உடைத்து, 1,000 லிட்டர் சாராய ஊறல், எட்டு மூட்டை வெல்லம் மற்றும் அங்கிருந்த சாராயத்தை அழித்த போலீசார், மலையை விட்டு இறங்கினர்.அப்போது, நச்சுமேடு மக்கள் விரட்டிச் சென்று போலீசாரை சிறை பிடித்தனர். பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா சென்று விசாரணை நடத்தினார். இதில், சாராய வியாபாரிகள் இளங்கோ, செல்வம் ஆகியோர் வீட்டு கதவை எஸ்.ஐ., அன்பழகன், போலீசார் யுவராஜ், 45, இளையராஜா, 47, ஆகியோர் உடைத்து பீரோவில் இருந்த, 8.50 லட்சம் ரூபாய், 15 சவரன் நகையை திருடியதாக, மக்கள் கூறினர்.முதலில் மறுத்த அவர்கள், பின் ஒப்புக் கொண்டனர். பணம், நகையை இளங்கோ, செல்வத்திடம் திருப்பி கொடுத்ததால், சிறை பிடிக்கப்பட்ட போலீசாரை, கிராம மக்கள் விடுவித்தனர்.எஸ்.ஐ., அன்பழகன் உட்பட மூவர் மீதும் அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களை, 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., செல்வகுமார் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X