பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் சமூக பரவலாகிறதா கொரோனா: வீட்டை விட்டு வெளியே வர தடை

Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:கோவையில், அத்திக்குட்டையை சேர்ந்த, 31 பேருக்கும், நஞ்சுண்டாபுரத்தில், 51 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு அமலில் இருந்தாலும், மளிகை, காய்கறி, இறைச்சி, பழக்கடைகள் செயல்பட அனுமதி அளித்திருப்பதால், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. உயிரிழப்பு எண்ணிக்கை
 கோவையில் சமூக பரவலாகிறதா கொரோனா: வீட்டை விட்டு வெளியே வர தடை

கோவை:கோவையில், அத்திக்குட்டையை சேர்ந்த, 31 பேருக்கும், நஞ்சுண்டாபுரத்தில், 51 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு அமலில் இருந்தாலும், மளிகை, காய்கறி, இறைச்சி, பழக்கடைகள் செயல்பட அனுமதி அளித்திருப்பதால், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
சில நாட்களுக்கு முன், கோல்டுவின்ஸ், தொட்டிபாளையயம் பிரிவு அருகே அத்திக்குட்டையில், மளிகை வியாபாரம் செய்து வந்த, திருநெல்வேலியை சேர்ந்த ஒருவர், கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தார். இறுதிச்சடங்கில் திருநெல்வேலியை சேர்ந்த உறவினர்களும், சுற்றுவட்டாரத்தினரும் பங்கேற்றனர்.அப்போது, பலருக்கும் தொற்று பரவியுள்ளது. பரிசோதனையில், 31 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. அத்திக்குட்டை பகுதியை சுற்றிலும், தகர ஷீட் அடித்து, மறைப்பு ஏற்படுத்தி, தனிமைப்படுத்திய பகுதியாக மாநகராட்சி அறிவித்துள்ளது.மாநகராட்சி, 75வது வார்டுக்கு உட்பட்ட, நஞ்சுண்டாபுரம் பகுதியில், இதுவரை, 650 பேருக்கு சளி மாதிரி சேகரித்து பரிசோதித்ததில், 56 பேருக்கு தொற்று உறுதியானது. அங்கும் தகர ஷீட் மறைப்பு ஏற்படுத்தி, மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், மாநகராட்சி பகுதியில் தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சமூகத்தொற்றாக கொரோனா பரவுகிறதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அத்திக்குட்டையில், 301 குடும்பத்தை சேர்ந்த, 809 பேர் வசிக்கின்றனர். 301 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது; 31 பேருக்கு தொற்று உறுதியானதால், தனிமைப்படுத்திய பகுதியாக அறிவித்துள்ளோம். வரும், 19 வரை வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜூன்-202117:47:37 IST Report Abuse
Ram Pollachi சட்டத்திற்கு உட்பட்டு இடைவெளி விட்டு யாரும் கட்டிடம் கட்டுவது இல்லை. வெளியே வரும் மனிதனுக்கு மட்டும் சமூக இடைவெளி, முக கவசம் தேவையா? அடிப்படை தவறுகளை சரி செய்ய நடவடிக்கை எடுங்கள். தடுப்பூசி போட்டவர்களை பற்றி கணக்கு எடுக்க பல இளைஞர்கள் வீதியில் திரிகின்றார்கள் இவர்களுக்கு ஊசி போடப்பட்டுள்ளதா? ஒரு சதவீதம் தொற்று உள்ளவர்களை எல்லாம் அழைத்து செல்கிறார்கள். தொற்றாளி ஒரு நபருக்கு ரூபாய் நாற்பது ஆயிரம் ஒதுக்கியதாக தகவல் வருகிறது என்ன நடக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X