பொது செய்தி

இந்தியா

மைசூரில் 72 சதவீதம் முதியோருக்கு தடுப்பூசி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மைசூரு-''மைசூரு நகரில், 72 சதவீதம் முதியோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 100 சதவீதம் பேருக்கு போடுவதே எங்கள் இலக்கு,'' என, கூட்டுறவு துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சோமசேகர் தெரிவித்தார்.தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் சார்பில், மைசூரு மாவட்ட நிர்வாகத்துக்கு, 5.5 டன் ஆக்சிஜன், எஸ்.எம்.டி., மருத்துவமனைக்கு ஒரு வென்டிலேட்டர் நேற்று வழங்கப்பட்டது.கூட்டுறவு துறை

மைசூரு-''மைசூரு நகரில், 72 சதவீதம் முதியோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 100 சதவீதம் பேருக்கு போடுவதே எங்கள் இலக்கு,'' என, கூட்டுறவு துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சோமசேகர் தெரிவித்தார்.தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் சார்பில், மைசூரு மாவட்ட நிர்வாகத்துக்கு, 5.5 டன் ஆக்சிஜன், எஸ்.எம்.டி., மருத்துவமனைக்கு ஒரு வென்டிலேட்டர் நேற்று வழங்கப்பட்டது.கூட்டுறவு துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சோமசேகர் முன்னிலையில், தர்மஸ்தலா தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டே, மாவட்ட கலெக்டர் பகாதி கவுதமிடம் அதிகாரபூர்வமாக நேற்று ஒப்படைத்தார்.அப்போது, ஏழை, எளிய மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன.பின், அமைச்சர் சோமசேகர் கூறியதாவது:தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தினர், கேட்காமலே அனைத்தும் செய்கின்றனர். கொடுக்கும் மனம் படைத்தவர் வீரேந்திர ஹெக்டே.மைசூரு நகரில், 72 சதவீதம் முதியோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 100 சதவீதம் பேருக்கு போடுவதே எங்கள் இலக்கு. மருத்துவர்கள் கிராமங்களில் தங்கி சிகிச்சை அளிக்கும் நிகழ்ச்சி வெற்றி பெற்றுள்ளது.இதன் மூலம் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வருகிறோம். மாவட்டத்தில் மொத்தம், 88 பேருக்கு கறுப்பு பூஞ்சை தாக்கியுள்ளது. இதில், 10 பேர் இறந்து விட்டனர். 62 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X