பொது செய்தி

இந்தியா

கோவிட் சிறைக்கைதிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மைசூரு-கொரோனா தொற்று பொது மக்களை மட்டுமின்றி, சிறைக்கைதிகள் பரஸ்பரம் பேசிக்கொள்வதற்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. தனித்தனியாக பொழுது போக்க வேண்டியுள்ளதால், விரக்தி மனநிலையில் உள்ளனர்.மைசூரில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மாவட்ட நிர்வாகம் கடும் விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.இடையூறுசிறைகளிலும் கைதிகளுக்கு கொரோனா பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மைசூரு-கொரோனா தொற்று பொது மக்களை மட்டுமின்றி, சிறைக்கைதிகள் பரஸ்பரம் பேசிக்கொள்வதற்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. தனித்தனியாக பொழுது போக்க வேண்டியுள்ளதால், விரக்தி மனநிலையில் உள்ளனர்.மைசூரில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மாவட்ட நிர்வாகம் கடும் விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.இடையூறுசிறைகளிலும் கைதிகளுக்கு கொரோனா பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கைதிகள் இடையூறாக இருப்பதாக கருதுகின்றனர்.மைசூரு மத்திய சிறையில் 47 பெண் கைதிகள் உட்பட 687 கைதிகள் உள்ளனர். இதற்கு முன், காலை முதல், மாலை வரை சிறை அறைகள் பூட்டப்படாது.சிறை வளாகத்தில், கைதிகள் ஒன்று சேர்ந்து காணப்படுவர்; உணவருந்துவர்; அரட்டையடிப்பர்.சில நேரங்களில் இவர்களுடன் சிறை ஊழியர்களும் கூட, அரட்டையில் சேர்ந்து கொள்வதுண்டு. நான்கு சுவர்களின் மத்தியில் அடைபட்டிருந்தாலும், ஓய்வு நேரத்தில், அனைவருடனும் கலந்து பழக வாய்ப்பிருந்தது.ஆனால், கைதிகளின் மகிழ்ச்சியான நேரத்தை கொரோனா பறித்துள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க, சமூக விலகலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.குழுக்கள் பிரிப்புகைதிகளை மொத்தமாக வெளியே விடாமல் குழுவாக பிரித்து வெளியே விடுகின்றனர். முன் போல, காலை முதல் மாலை வரை, வளாகத்தில் நடமாட முடியாது. நிர்ணயித்த நேரத்தில் மட்டும் வெளியே வந்து உணவு, சிற்றுண்டியை முடித்து கொண்டு, சிறையறைக்குள் சென்று விட வேண்டும்.அறைகளில் சமூக விலகலை பின் பற்றும் வகையில், வேறு நோக்கத்துக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் சக கைதிகளுடன் பேசவும் முடியாமல், மவுனமாக காலம் கடத்துகின்றனர்.மைசூரு மத்திய சிறை அதிகாரி திவ்யஸ்ரீ கூறியதாவது:கொரோனா முதல் அலை இருந்த போது, கைதிகளில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. எனவே இரண்டாவது அலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம்.காலி அறைகளில்ஒரே அறையில் கைதிகளை அடைக்காமல் காலியாக உள்ள அறைகளில் அடைக்கப்படுகின்றனர்.அனைவரையும் ஒரே நேரத்தில், உணவு, சிற்றுண்டி அருந்துவதற்கு அனுப்பினால், சமூக விலகலை பின்பற்றுவது கஷ்டம் என்பதால் தனித்தனி பிரிவாக அனுப்பப்படுகின்றனர்.கைதிகளின் ஆரோக்கியத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளோம்.கொரோனா தொற்று ஏற்படும் கைதிகளுக்கு கொரோனா சிகிச்சை மையம், மன்டகள்ளியில் உள்ள, கொரோனா கேர் சென்டரின், சிறைக்கைதிகள் வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.சிறையில் உடல் நிலை பாதிப்படைந்த கைதிகள், தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.சிறை அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமின்றி, அனைத்து கைதிகளும் முக கவசம் அணிவது கட்டாயம். இது குறித்து ரோந்து ஊழியர்கள் கண்காணிக்கின்றனர்.மறுப்புசிறையிலுள்ள அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், பரோலில் செல்ல கைதிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 54 கைதிகள் வீட்டுக்கு சென்றனர். ஒன்பது கைதிகள் வெளியே செல்ல மறுத்து, சிறையே பாதுகாப்பு என கருதி, இங்கேயே உள்ளனர்.கைதிகளுக்கு தினமும் ஊட்டச்சத்தான உணவு வழங்கப்படுகிறது. ஒரு நாள் விட்டு ஒருநாள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கஷாயம் அளிக்கப்படுகிறது.கொரோனா பரிசோதனை அவ்வப்போது கொரோனா பரிசோதனை நடத்தி தொற்று ஏற்பட்ட கைதிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.வயது, 45க்கு மேற்பட்ட கைதிகளுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. சிறைக்கு புதிதாக வரும் விசாரணை கைதிகளை சிறையில் அடைப்பதற்கு முன், கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.கைலாசபுரத்தில், தற்காலிக சிறையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு தனிமையில் வைக்கப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X