காய்கறி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பெங்களூரு-கொரோனா நெருக்கடியால் சிக்கி தவிக்கும் பொது மக்கள், காய்கறிகளின் விலை உயர்வால், பாதிப்படைந்துள்ளனர்.கர்நாடகாவில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. மின் கட்டணமும் அதிகரித்துள்ளது.இதற்கிடையில் காய்கறிகளின் விலையும், கிடு, கிடுவென அதிகரித்துள்ளது. கிலோ 60 ரூபாயாக இருந்த பீன்ஸ், 90 ரூபாயாகவும், ஊட்டி கேரட் 52 ரூபாயிலிருந்து, 62 ரூபாயாகவும்

பெங்களூரு-கொரோனா நெருக்கடியால் சிக்கி தவிக்கும் பொது மக்கள், காய்கறிகளின் விலை உயர்வால், பாதிப்படைந்துள்ளனர்.கர்நாடகாவில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. மின் கட்டணமும் அதிகரித்துள்ளது.இதற்கிடையில் காய்கறிகளின் விலையும், கிடு, கிடுவென அதிகரித்துள்ளது. கிலோ 60 ரூபாயாக இருந்த பீன்ஸ், 90 ரூபாயாகவும், ஊட்டி கேரட் 52 ரூபாயிலிருந்து, 62 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.உருளைக்கிழங்கு, தக்காளி மட்டும் கைக்கெட்டும் விலையில் கிடைக்கிறது. இதற்கு முன் நாசிக்கிலிருந்து, வெங்காயம் வரவழைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அங்கிருந்து வெங்காயம் வராததால், பற்றாக்குறை ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.மார்க்கெட்டுகளில், காலை 6:00 மணி முதல், 10:00 மணிவரை வியாபாரத்துக்கு அனுமதியுள்ளது. ஆனால், 9:00 மணிக்கே கடைகளை மூடுகின்றனர். மக்களும் விரைவில் வீட்டை அடைய வேண்டுமென்பதால், விலையை பற்றி பொருட்படுத்தாமல் வாங்கிச்செல்கின்றனர். மழைக்காலத்தில் காய்கறிகள் விலை உயர்வது சகஜம்தான். ஆனால் கொரோனா நெருக்கடியுள்ள நேரத்தில், விலையை மனம் போனபடி விற்பது சரியல்ல.அரசு தலையிட்டு, விலை உயர்வுக்கு கடிவாளம் போடும்படி, பலரும் கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X