பொது செய்தி

இந்தியா

கே.எஸ்.ஆர்.டி.சி., பயணியர் பாதுகாப்பாக அலாரம் தொழில்நுட்பம் பயன்படுத்த முடிவு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பெங்களூரு-கே.எஸ்.ஆர்.டி.சி., பயணியர் பாதுகாப்புக்காக, அலாரம் தொழில்நுட்பத்தை பயன்படுத்த, முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம், உயர் அதிகாரியொருவர் கூறியதாவது:பஸ்களில் பயணியர் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதற்காக 'கொலிஜியன் வார்னிங் சிஸ்டம்' மற்றும் 'டிரைவர் டிரோஜினெஸ் சிஸ்டம்'

பெங்களூரு-கே.எஸ்.ஆர்.டி.சி., பயணியர் பாதுகாப்புக்காக, அலாரம் தொழில்நுட்பத்தை பயன்படுத்த, முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம், உயர் அதிகாரியொருவர் கூறியதாவது:பஸ்களில் பயணியர் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதற்காக 'கொலிஜியன் வார்னிங் சிஸ்டம்' மற்றும் 'டிரைவர் டிரோஜினெஸ் சிஸ்டம்' ஆகிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.பஸ் ஓட்டும் போது, ஓட்டுனர் உறங்கினால் அலாரம் அடித்து, அவரை எச்சரிக்கும். பஸ்சின் முன் பகுதியில், ஒரு கேமரா பொருத்தப்படும்.இக்கேமரா இரவு நேரத்தில், 200 மீட்டர் தொலைவில் உள்ள வாகனம் குறித்து, ஓட்டுனருக்கு தகவல் தெரிவிக்கும்.மற்றொரு கேமரா ஓட்டுனரின் முகத்துக்கு நேர்ப்பகுதியில் பொருத்தப்படும். இவர் இரவு நேர பயணத்தில் பஸ் ஓட்டும் போது, அலாரம் அடித்து எச்சரிக்கும்.பஸ்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும், கேமரா பதிவு செய்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். இப்புதிய தொழில்நுட்பம், விபத்துகளை கட்டுப்படுத்த உதவும்.முதற்கட்டமாக 1,044 பஸ்களில் இத்தொழில்நுட்பம் பொருத்த, திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X