விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பெலகாவி-பெலகாவியில் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பெலகாவி நகரில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறி நெசவாளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் பாலிஸ்டர், காட்டன் சேலைகள் அதிகமாக நெசவு செய்யப்படுகின்றன.இங்கு ஒவ்வொரு நெசவாளர் வீட்டிலும் குறைந்தபட்சம் இரண்டு

பெலகாவி-பெலகாவியில் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பெலகாவி நகரில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறி நெசவாளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் பாலிஸ்டர், காட்டன் சேலைகள் அதிகமாக நெசவு செய்யப்படுகின்றன.இங்கு ஒவ்வொரு நெசவாளர் வீட்டிலும் குறைந்தபட்சம் இரண்டு விசைத்தறிகள் வைத்து ஓட்டுகின்றனர்.பெரும்பான்மையான நெசவாளர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் கடனுதவி பெற்று சேலைகளை நெசவு செய்து, விற்றபின் கிடைக்கும் வருவாயிலிருந்து கடனை அடைக்கின்றனர்.சுழற்சி முறையில் கடனுதவி மூலம் தொடர்ந்து நெசவு செய்கின்றனர். கொரானா பாதிப்பால் இத்தொழிலை கைவிடவும் முடியாமல், தொடர்ந்து நடத்தவும் வழியின்றி உள்ளனர்.நெசவாளர்கள் கூறியதாவது:ஊரடங்கிற்கு முன், வாரம்தோறும், 4,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடிந்தது. தற்போது 1,000 ரூபாய் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. ஒவ்வொரு குடும்பமும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயாவது கடனுதவி பெற்றுள்ளனர்.அரசு உதவித்தொகை அறிவித்துள்ளது. ஆனால் உணவுத்தேவைக்கு கூட அந்த தொகை பற்றாக்குறையாக உள்ளது.பலரும் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வழியில்லாத நிலையில் உள்ளனர்.இதனால் குழந்தைகளை, வலுக்கட்டாயமாக காய்கறி, பழம், பூ விற்க அனுப்புகிறோம். அவர்களை படிக்க வைக்க முடியவில்லை.சமீபத்தில் கடன்தொகையை செலுத்த முடியாமல் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அரசு எங்களின் நிலையை கண்டு கொள்ள வேண்டும். ஏற்கனவே பல குடும்பத்தினர் இந்த தொழிலை விட்டு தினக்கூலி வேலைக்கு சென்று விட்டனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X