பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களை கவனிங்க...தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க முகாம்: கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை பகுதி கிராம மக்கள் தடுப்பூசி என்ற ஆயுதம் இல்லாமல், நிராயுதபாணியாக உள்ளனர். கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 2 லட்சத்து, 29 ஆயிரத்து 11 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 44 ஆயிரத்து, 335 பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் என, 2 லட்சத்து, 73 ஆயிரத்து, 346 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதில்,

உடுமலை:உடுமலை பகுதி கிராம மக்கள் தடுப்பூசி என்ற ஆயுதம் இல்லாமல், நிராயுதபாணியாக உள்ளனர். கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 2 லட்சத்து, 29 ஆயிரத்து 11 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 44 ஆயிரத்து, 335 பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் என, 2 லட்சத்து, 73 ஆயிரத்து, 346 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதில், ஆண்கள் 1 லட்சத்து, 31 ஆயிரத்து, 585 பேரும், பெண்கள், 97 ஆயிரத்து, 392 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர்.60 வயதிற்கு மேற்பட்டோர், 55 ஆயிரத்து, 28 பேரும், 45 வயதிற்கு மேற்பட்டோர், 82 ஆயிரத்து, 950 பேரும், 18 வயதிற்கும் மேற்பட்டோர், 90 ஆயிரத்து, 980 பேரும் பயன்பெற்றுள்ளனர்.கோவிஷீல்டு, 2 லட்சத்து, 30 ஆயிரத்து, 750 பேருக்கும், கோவாக்சின், 42,596 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், கிராமங்களே அதிகளவு உள்ளது. தென்னை, மக்காச்சோளம், காய்கறிகள் என விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ளது.இரு ஆண்டாக தொற்றுப்பரவல், ஊரடங்கு என பல நடைமுறைகள் வந்தாலும், விவசாயம் முடங்காமல், மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்து, தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஆதாரமாக இருந்தவர்கள், கிராம மக்களே.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களிலுள்ள, 72 ஊராட்சிகளில், 60 ஊராட்சிகளில் தொற்றுப்பரவல் உள்ளது.இதனால், கிராமங்களில் உழவுத்தொழில் முடங்கியுள்ளது. பருவ மழை துவங்கியுள்ள நிலையில், உழவு, விதைப்பு என சாகுபடி பணியை துவக்குவதும், விளைந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமலும், அறுவடை செய்தாலும் விற்க முடியாமலும், வேளாண் தொழில் முடங்கியுள்ளது.தொற்றுப்பரவல் காரணமாக, பலர் பலியாகியுள்ள நிலையில் தொற்றுக்கான ஆயுதமாக உள்ள தடுப்பூசிகள் இல்லாமல், நிராயுதபாணியாக உள்ளனர்.நகரப்பகுதியில், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏராளமானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், கிராமங்களுக்கு போதிய அளவு தடுப்பூசிகள் ஒதுக்கப்படவில்லை.ஒதுக்கப்பட்ட குறைந்தளவு தடுப்பூசிகளையும், சுகாதாரத்துறை அதிகாரிகள் முறையாக செலுத்தாமல், நுாற்பாலைகள், பின்னலாடை நிறுவனங்களுக்கு நேரில் சென்று, செலுத்தி 'கடமை'யாற்றியுள்ளனர்.ஆரம்ப சுகாதார நிலையங்கள் கணக்கில் இவை வருவதால், கிராமங்களுக்கு செலுத்தியதாக கணக்கு காட்டியுள்ளனர். பெரும்பாலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை என திருப்பி அனுப்பினர்.கணக்கம்பாளையம், போடிபட்டி என ஒரு சில கிராமங்களில் மட்டும் சிறப்பு முகாம்கள் நடத்தி,அதிகப்பட்சமாக 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இவ்வாறு, பல லட்சம் மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களுக்கு, 3 சதவீதத்திற்கும் குறைவாகவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.தற்போது, தொற்றுப்பரவலால், கிராமப்புற மக்கள் தடுப்பூசியை எதிர்பார்த்து காத்திருக்க வைத்துள்ளது. எனவே, கிராம மக்கள் தொகைக்கு ஏற்ப, நகர பகுதிக்கு இணையாக கிராமப்பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.கடந்த சில நாட்களாக தடுப்பூசி செலுத்தும் பணி நடக்காத நிலையில், அடுத்த முறை தடுப்பூசி வரும் போது, கிராமங்களை அதிகம் கொண்ட உடுமலை பகுதிக்கு கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும். கிராமங்களில் நேரடியாக சிறப்பு முகாம்களை அமைத்து, அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X