ஆக்சிஜன் அசம்பாவிதம் குறித்து புகார் அளிக்க முடியாமல் தவிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மைசூரு-சாம்ராஜ்நகரில் ஆக்சிஜன் அசம்பாவிதம் நடந்தது. ஆனால் நீதி விசாரணை கமிஷன் அலுவலகம் மைசூரில் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள், புகார் அளிக்க முடியாமல் தவிக்கின்றனர்.சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையில், மே 2ல் ஆக்சிஜன் பற்றாக்குறையால், 24 கொரோனா நோயாளிகள் இறந்தனர்.மைசூரு மாவட்ட நிர்வாகம், சரியான நேரத்துக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யாததே, உயிழப்புக்கு காரணம் என,

மைசூரு-சாம்ராஜ்நகரில் ஆக்சிஜன் அசம்பாவிதம் நடந்தது. ஆனால் நீதி விசாரணை கமிஷன் அலுவலகம் மைசூரில் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள், புகார் அளிக்க முடியாமல் தவிக்கின்றனர்.சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையில், மே 2ல் ஆக்சிஜன் பற்றாக்குறையால், 24 கொரோனா நோயாளிகள் இறந்தனர்.மைசூரு மாவட்ட நிர்வாகம், சரியான நேரத்துக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யாததே, உயிழப்புக்கு காரணம் என, சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் குற்றம் சாட்டினார்.இதனால் அனைவரின் கோபப்பார்வையும், மைசூரு மாவட்ட கலெக்டராக இருந்த, ரோகிணி சிந்துாரி மீது திரும்பியது. ஆனால் அவர் குற்றச்சாட்டை மறுத்தார்.இந்த சம்பவம், இரு மாவட்ட கலெக்டர்களின் பனிப்போருக்கு காரணமானது. சம்பவம் குறித்து, ஆய்வு செய்வதற்காக கர்நாடக உயர்நீதிமன்றம் அமைத்திருந்த குழு, சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவனையில் நடந்த சம்பவத்துக்கு, அம்மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பின்மையே காரணம் என, அறிக்கையளித்திருந்தது.இதற்கிடையில், சம்பவத்துக்கு காரணம் பற்றி, விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஏ.பாட்டீல் தலைமையில், நீதி விசாரணை கமிஷனை, மாநில அரசு அமைத்துள்ளது.இந்த ஆணைய அலுவலகம், மைசூரின் 'ஜலதர்ஷினி' விருந்தினர் இல்லத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த நோயாளிகளின் உறவினர்கள், சம்பவம் பற்றி தெரிந்தவர்கள், அலுவலகத்துக்கு வந்து புகார் அளிக்கும்படி, விசாரணை கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது.ஊரடங்கால் மாவட்டங்களுக்கிடையே, பஸ், ரயில் போக்குவரத்து இல்லை. எனவே பாதிக்கப்பட்டவர்கள், புகார் அளிக்க தொலைவிலுள்ள மைசூருக்கு வருவதில் பிரசனை ஏற்பட்டுள்ளது.காங்., முன்னாள் எம்.பி., துருவ நாராயணா கூறுகையில், ''ஆக்சிஜன் அசம்பாவிதம் நடந்தது சாம்ராஜ்நகரில், ஆனால் நீதி விசாரணை கமிஷன் அலுவலகம் இருப்பது மைசூரில். உடனடியாக அலுவலகத்தை, சாம்ராஜ்நகருக்கு மாற்ற வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X