பொது செய்தி

இந்தியா

ரோகிணி சிந்தூரி இடம் மாற்றத்திற்கு நடிகை ரம்யா அதிருப்தி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பெங்களூரு-அரசியல், திரையுலகிலிருந்து விலகியிருந்த நடிகை ரம்யா, தற்போது ரோகிணி சிந்துாரி இடம் மாற்றம் செய்யப்பட்டதற்கு, அதிருப்தி தெரிவித்துள்ளார்.நடிகையும், அரசியல்வாதியுமான ரம்யா, லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு, தோற்ற பின், கட்சியின் ஊடக பிரிவு தலைவராக இருந்தார். அதன்பின் அந்த பதவியிலிருந்தும் விலகினார்.அவ்வப்போது பா.ஜ., அரசு மற்றும்

பெங்களூரு-அரசியல், திரையுலகிலிருந்து விலகியிருந்த நடிகை ரம்யா, தற்போது ரோகிணி சிந்துாரி இடம் மாற்றம் செய்யப்பட்டதற்கு, அதிருப்தி தெரிவித்துள்ளார்.நடிகையும், அரசியல்வாதியுமான ரம்யா, லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு, தோற்ற பின், கட்சியின் ஊடக பிரிவு தலைவராக இருந்தார். அதன்பின் அந்த பதவியிலிருந்தும் விலகினார்.அவ்வப்போது பா.ஜ., அரசு மற்றும் பிரதமர் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வந்தார்.ரம்யா திருமணத்துக்கு தயாராவதாகவும், மீண்டும் நடிப்புக்கு திரும்புவதாகவும் தகவல் வெளியானது. இதற்கு எந்த விளக்கமும் அவரிடமிருந்து வரவில்லை.இந்நிலையில் மைசூரு மாவட்ட கலெக்டர் பதவியிலிருந்து, ரோகிணி சிந்துாரியை இடம் மாற்றியதற்கு, ரம்யா அதிருப்தி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:நேர்மையான அதிகாரியான ரோகிணி சிந்துாரியை இடம் மாற்றியது வருத்தமளிக்கிறது. இவரை போன்ற அதிகாரிகளுக்கு, இன்றைய அரசு ஊக்கமளிப்பதில்லை. அவரை இடம் மாற்றியது சரியல்ல.ரோகிணி சிந்துாரியின் பணித்திறனை, அன்று நான் பார்த்து பாராட்டினேன். இப்போதும் பாராட்டுகிறேன். ஆனால் இன்றைய அரசியல் வாதிகள், நற்பணிகளை செய்யும் அதிகாரிகளை ஆதரிப்பதில்லை. ஊக்கமளிப்பதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X