பொது செய்தி

இந்தியா

மிருகக்காட்சி சாலைகள் பொருளாதார சிக்கலில் தவிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பெங்களூரு-கொரோனாவால், மாநிலத்தின் ஒன்பது மிருகக்காட்சிசாலைகள், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. இவைகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும், விலங்குகளை தத்தெடுக்க வேண்டுமென, நடிகர் தர்ஷன் விடுத்த வேண்டுகோளுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.கர்நாடகாவில் மைசூரின், ஜெயசாமராஜேந்திர மிருகக்காட்சிசாலை, பெங்களூரின் பன்னரகட்டா உட்பட, ஒன்பது மிருகக்காட்சிசாலைகள் உள்ளன.

பெங்களூரு-கொரோனாவால், மாநிலத்தின் ஒன்பது மிருகக்காட்சிசாலைகள், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. இவைகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும், விலங்குகளை தத்தெடுக்க வேண்டுமென, நடிகர் தர்ஷன் விடுத்த வேண்டுகோளுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.கர்நாடகாவில் மைசூரின், ஜெயசாமராஜேந்திர மிருகக்காட்சிசாலை, பெங்களூரின் பன்னரகட்டா உட்பட, ஒன்பது மிருகக்காட்சிசாலைகள் உள்ளன. இங்கு 5,000 க்கும் மேற்பட்ட வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.வன விலங்குகள், பறவைகளை கண்டு ரசிக்க, தினமும் உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தந்தனர்.இதனால் மிருகக்காட்சிசாலைகளுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைத்தது. ஆனால் கொரோனா பரவியதால், மிருகக்காட்சிசாலைகள் மூடப்பட்டுள்ளது. வருவாய் இல்லாமல், விலங்குகளை பராமரிப்பதற்கு, தொந்தரவு ஏற்படுகிறது. நடிகர் தர்ஷன், ஜூன் 5ல் கர்நாடக மிருகக்காட்சிசாலை வாரியம் சார்பில், வீடியோ வெளியிட்டார். அதில், 'கொரோனாவால் மிருகக்காட்சிசாலைகள், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. நன்கொடையாளர்கள், நிதியுதவி வழங்குவதுடன், விலங்குகளை தத்தெடுக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார். இவரது வேண்டுகோளுக்கு இணங்கி, பலரும் மிருகக்காட்சிசாலைகளுக்கு, லட்சக்கணக்கான ரூபாய் நிதியுதவி வழங்குகின்றனர்.மைசூரின் மிருகக்காட்சிசாலைக்கு மட்டுமே, 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான நன்கொடை வந்துள்ளது. அது மட்டுமின்றி பலரும், விலங்குகளை தத்தெடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X