சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் பணி: மோசடி நபர் மீது போலீசில் புகார்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
உடுமலை:அரசு மருத்துவமனையில் நிரந்தர வேலை என மோசடியாக பணம் பறித்தவர் மீது, துாய்மைப்பணியாளர்கள் 20 பேர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.உடுமலை அரசு மருத்துவமனையில், தனியார் நிறுவனம் சார்பில், தற்காலிக துாய்மைப்பணியாளர்கள், கடந்தாண்டு நியமிக்கப்பட்டனர். அப்போது, தனியார் நிறுவன ஊழியர், நிரந்தர பணி என ஏமாற்றி, பணம் பறித்ததாக உடுமலை போலீஸ் ஸ்டேஷனில், 20க்கும் மேற்பட்ட
 அரசு மருத்துவமனையில் பணி: மோசடி நபர் மீது போலீசில் புகார்

உடுமலை:அரசு மருத்துவமனையில் நிரந்தர வேலை என மோசடியாக பணம் பறித்தவர் மீது, துாய்மைப்பணியாளர்கள் 20 பேர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.உடுமலை அரசு மருத்துவமனையில், தனியார் நிறுவனம் சார்பில், தற்காலிக துாய்மைப்பணியாளர்கள், கடந்தாண்டு நியமிக்கப்பட்டனர். அப்போது, தனியார் நிறுவன ஊழியர், நிரந்தர பணி என ஏமாற்றி, பணம் பறித்ததாக உடுமலை போலீஸ் ஸ்டேஷனில், 20க்கும் மேற்பட்ட துாய்மைப்பணியாளர்கள் புகார் கொடுத்தனர்.அதில் கூறியுள்ளதாவது:கடந்தாண்டு, ஜூன் மாதம், கணபதிபாளையத்தை சேர்ந்த, ஜெயப்பிரகாஷ், உடுமலை அரசு மருத்துவமனையில் வேலை பார்ப்பதாகவும், துப்புரவு பணியாளர்கள், 50 பேர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.அரசு வேலை என கூறி, ஒவ்வொருவரிடமும், தலா, 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பெற்றுக்கொண்டார். பிறகு, விசாரித்ததில், தனியார் நிறுவனம் துப்புரவு ஒப்பந்த பணி என தெரிந்தது. எனவே, பணத்தை திரும்ப தரும்படி பல முறை கேட்டும் கொடுக்கவில்லை. எனவே, தனியார் நிறுவன ஊழியர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு, அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புகார் மனுக்களை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X