பொது செய்தி

இந்தியா

சமூக வலைதளங்களில் மருத்துவ குறிப்புகள் ஆபத்தை வரவழைக்கலாம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பெங்களூரு-சமூக வலைதளங்களில் பகிரப்படும் மருத்துவ குறிப்புகளின் உண்மையை அறியாமல் பின்பற்றுவது ஆபத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளோருக்கு மாம்பழம் நல்லது என்ற கருத்து, சில நாட்களாக சமூக வலைதளங்கில் பரவி வருகிறது.இவ்வாறு பகிரப்படும் தகவல்களின் உண்மையை ஆராயாமல், சிலர் கண்மூடித்தனமாக பின்பற்றுவது ஆபத்தை

பெங்களூரு-சமூக வலைதளங்களில் பகிரப்படும் மருத்துவ குறிப்புகளின் உண்மையை அறியாமல் பின்பற்றுவது ஆபத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளோருக்கு மாம்பழம் நல்லது என்ற கருத்து, சில நாட்களாக சமூக வலைதளங்கில் பரவி வருகிறது.இவ்வாறு பகிரப்படும் தகவல்களின் உண்மையை ஆராயாமல், சிலர் கண்மூடித்தனமாக பின்பற்றுவது ஆபத்தை ஏற்படுத்தும், என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.ஜெயதேவா இதய மருத்துவமனை இயக்குனர் மஞ்சுநாத் கூறியதாவது:நீரிழிவு நோயாளிகள், மாம்பழத்தை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அதிகமாக உட்கொள்வது அவர்களின் நிலையை மோசமாக்கும்.மாம்பழம், பலாப்பழம் போன்ற பழங்களை சாப்பிடாமல் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.இத்தகைய பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நன்றாக இருப்பினும், குறைந்த அளவில் இருக்க வேண்டும்.ஒரு மாம்பழத்தின் நான்கில் ஒரு பகுதியை சாப்பிடலாம்; பாதிக்காது. எந்தவொரு நோயாளியும் ஆரோக்கியமாக இருக்க உப்பு, மன அழுத்தம், புகைபிடிப்பது, இடைவிடாத செயல்பாடு உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.மாம்பழங்களுக்கு, உயர் ரத்த அழுத்தத்துடன் எந்த தொடர்பும் இல்லை. தகுதியற்ற நபர்கள் வழங்கிய ஆன்லைன் தளங்களில் கொடுக்கும் நோய் பாதிப்பு, அதற்கான தீர்வுகள், ஆலோசனையை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை விட மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X