பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர் சீட்டின்றி மருந்து வழங்காதீர்: தொடர் விழிப்புணர்வு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
உடுமலை:டாக்டர் சீட்டின்றி காய்ச்சலுக்கு மாத்திரைகள் வழங்கக்கூடாது என, மருந்துக்கடை உரிமையாளர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்பு இருந்தால், பலரும், மருத்துவமனைக்கு செல்லாமல், மருந்துக்கடைக்கு சென்று, மருந்து வாங்கி உட்கொள்கின்றனர். இதனால், தொற்று பாதிப்பு அதிகரிப்பதுடன், நோய் பாதித்தவர்களை கண்டறிவதில்

உடுமலை:டாக்டர் சீட்டின்றி காய்ச்சலுக்கு மாத்திரைகள் வழங்கக்கூடாது என, மருந்துக்கடை உரிமையாளர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்பு இருந்தால், பலரும், மருத்துவமனைக்கு செல்லாமல், மருந்துக்கடைக்கு சென்று, மருந்து வாங்கி உட்கொள்கின்றனர். இதனால், தொற்று பாதிப்பு அதிகரிப்பதுடன், நோய் பாதித்தவர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.எனவே, மருந்துக்கடைகளில் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி பிரச்னைகளுக்கு மருந்து, மாத்திரை கேட்டு வருவோரின் பெயர், முகவரி, மொபைல் எண் ஆகிய விபரத்தை சேகரித்து, மருந்தக ஆய்வாளர்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.அதேநேரம், மருந்தக ஆய்வாளர்கள், 'டாக்டர் மருந்துச்சீட்டு இன்றி மாத்திரைகள் வழங்கக்கூடாது,' என, மருந்துக்கடைக்காரர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மருந்தக ஆய்வாளர்கள் கூறியதாவது:காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி என தனித்தனியாக மருந்துக்கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வீட்டில் இருந்து விடுகின்றனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியா, இல்லையா என்பது குறித்து சுகாதாரத்துறையினரால் அறிய முடியவில்லை.இதனை தவிர்க்கவே மாத்திரை வாங்க வருவோர் குறித்த விவரங்கள் கோரப்படுகிறது. இது குறித்து, திருப்பூர் மாவட்டத்தில், தொடர்ந்து, மருந்துக்கடை உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மருந்து கடைகள் தோறும், அறிவிப்பும் இடம்பெறச் செய்யப்படுகிறது. தவறும்பட்சத்தில், கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்படுகின்றன. வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X