முகக்கவசம் அணியாத வாடிக்கையாளரால் வேதனை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
உடுமலை;உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று நோய் தடுப்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான உழவர் சந்தை, மார்க்கெட், பகுதிகளில் தினமும் கிருமி நாசினி மருந்துத் தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.ஊரடங்கு அமலில் உள்ள போதும், அத்தியாவசிய பணி மற்றும் தேவைகளுக்காக வரும் நபர்கள், முகக்கவசம் அணிவதில் அலட்சியம்

உடுமலை;உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று நோய் தடுப்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான உழவர் சந்தை, மார்க்கெட், பகுதிகளில் தினமும் கிருமி நாசினி மருந்துத் தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.ஊரடங்கு அமலில் உள்ள போதும், அத்தியாவசிய பணி மற்றும் தேவைகளுக்காக வரும் நபர்கள், முகக்கவசம் அணிவதில் அலட்சியம் காட்டுகின்றனர். அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் சிலர் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.எனவே, கடைக்காரர்கள், முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்களை விற்பனை செய்யும் வகையில், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X