பொது செய்தி

தமிழ்நாடு

மண் ஆய்வுக்காக மாதிரி சேகரிப்பு:உரம் பரிந்துரை பெற ஆர்வம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு வட்டாரத்தில் மண் ஆய்வு செய்து, உரமிடுவதற்காக, மண் மாதிரி சேகரிக்கும் பணியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிணத்துக்கடவு வட்டாரத்தில், 35 வருவாய் கிராமங்கள் உள்ளன. விவசாயிகள் தங்கள் நிலத்தில் பெரும்பாலும், தென்னை சாகுபடி செய்துள்ளனர்.இருப்பினும், குறிப்பிட்ட சதவீத விவசாயிகள், காய்கறி மற்றும் சிறு தானியப் பயிர்சாகுபடி மேற்கொண்டு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு வட்டாரத்தில் மண் ஆய்வு செய்து, உரமிடுவதற்காக, மண் மாதிரி சேகரிக்கும் பணியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிணத்துக்கடவு வட்டாரத்தில், 35 வருவாய் கிராமங்கள் உள்ளன. விவசாயிகள் தங்கள் நிலத்தில் பெரும்பாலும், தென்னை சாகுபடி செய்துள்ளனர்.இருப்பினும், குறிப்பிட்ட சதவீத விவசாயிகள், காய்கறி மற்றும் சிறு தானியப் பயிர்சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.சமீப நாட்களாக, விவசாயிகள் சாகுபடி நிலத்தின் மண் வளத்தை அறியவும், சத்து குறைபாடுடைய மண்ணின் வளத்தை அதிகரிக்கவும், தேவையான பயிருக்கு, துல்லியமான உரப்பரிந்துரையைப் பெறவும், வேளாண் துறையை அணுகி மண் ஆய்வு மேற்கொள்ள விண்ணப்பித்து வருகின்றனர்.கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தகுமார் கூறியதாவது:மண் ஆய்வு பரிசோதனைக்கு விவசாயிகள் விண்ணப்பித்து வருகின்றனர். தங்கள் நிலத்தின் மண்ணின் தன்மையை அறிந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், ஒரு ஏக்கரில், ஐந்து இடங்களில் மண் சேகரித்து, அதை ஒரு கிலோ அளவுக்கு கலந்து, கிணத்துக்கடவு வேளாண் விரிவாக்க மையம், வடசித்துார் துணை வேளாண் விரிவாக்க மையம் அல்லது அந்தந்த பகுதியின் உதவி வேளாண் அலுவலரிடம் சேர்க்க வேண்டும்.மண் மாதிரியுடன் கிராமத்தின் பெயர், விவசாயி பெயர், சர்வே எண், பரப்பு, சாகுபடி மேற்கொள்ள உள்ள பயிர் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X